fbpx

AIIMS போல் மதுரை சின்னப்பிள்ளைக்கு வீடும் வரவில்லை…! அமைச்சர் உதயநிதி விமர்சனம்…!

எய்ம்ஸ் போல் சின்னப்பிள்ளைக்கு வீடும் வரவில்லை என அமைச்சர் உதயநிதி விமர்சனம் செய்துள்ளார் ‌

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்; இந்திய ஒன்றியத்திலேயே முதன் முறையாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொடங்கிய மகளிர் சுய உதவிக்குழுவில் இணைந்து, கிராமப்புற மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்த மதுரை சின்னப்பிள்ளை அவர்களுக்கு, வீடு வழங்கப்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு தரப்பில் வாக்குறுதி தரப்பட்டது.

மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, சின்னப்பிள்ளைக்கு ஒன்றிய அரசின் வீடும் வரவில்லை. 2 ஆண்டு கால காத்திருப்புக்குப் பின், இதுகுறித்த வேதனையை சின்னப்பிள்ளை வெளிப்படுத்தியிருந்தார். இதையறிந்த நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், சின்னப்பிள்ளை அவர்களுக்கு தமிழ் நாடு அரசு சார்பில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிய வீடும், 380 சதுர அடி நிலத்திற்கான பட்டாவும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

‘மகளிர் மேம்பாடு’ எனும் கலைஞர் அவர்களின் கனவை நனவாக்க உழைத்த சின்னப்பிள்ளைக்கு, ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு கிடைக்கவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அவருக்கு என் அன்பும், வாழ்த்தும் என தனது எக.ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

Masi Amavasya 2024!… இன்றைய தினம் என்ன சிறப்பு தெரியுமா? கர்மவினைகள் கழிக்க இந்த பரிகாரங்களை செய்யுங்கள்!

Sun Mar 10 , 2024
Masi Amavasya: அமாவாசை என்பது முன்னோர் வழிபாட்டிற்குரிய நாள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நம்முடைய முன்னோர்களுக்காக விரதம் இருப்பது, தர்ப்பணம் கொடுப்பது ஆகியவற்றை செய்தாலும் தெய்வங்களுக்கு உரிய வழிபாடு மற்றும் நம்முடைய பிரச்சனைகள் தீருவதற்கான பரிகாரங்கள் ஆகியவற்றையும் செய்வதற்கு இது மிக முக்கியமான நாளாகும். அதிலும் இந்த ஆண்டு மாசி மாதம் வரும் அமாவாசை மிகவும் விசேஷமானதாகும். மாசி மாத அமாவாசையானது மார்ச் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று […]

You May Like