தமிழ்நாட்டில் இன்று நடைபெறவிருந்த பாஜக ஆர்ப்பாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற இருந்தனர். ஆனால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, தமிழ்நாட்டில் இன்று நடைபெறவிருந்த அனைத்து ஆர்ப்பாட்டங்களையும் ரத்து செய்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
அண்ணாமலை, இன்று (டிசம்பர் 27) காலை 10 மணிக்கு எனக்கு நானே சாட்டையால் அடித்து கொடுக்கக்கூடிய நிகழ்வை எனது வீட்டின் முன்பு நடத்தப் போவதாக அறிவித்திருந்தார். வீட்டின் முன்பு 6 முறை என்னை நானே சாட்டையால் அடித்துக் கொள்வேன் என கூறியிருந்தார். அதேபோல், திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு போட மாட்டேன் என்றும் 48 நாட்களுக்கு விரதம் இருந்து முருகனை வழிபடப் போவதாகவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.