fbpx

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு..!! ’இதே நிலைப்பாட்டில் உறுதியாக இருங்கள்’..!! சீமான்

சரியான நேரத்தில் மிகச்சரியாக முடிவெடுத்த முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் சீமான் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழ்நாட்டில் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டிருந்தது. ஆனால், அந்நாளில் தமிழ்நாட்டில் எந்த ஊர்வலமும், பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி தரப்படாது என்று கூறியுள்ளது தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், ”மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழக அரசின் முடிவை வரவேற்கிறேன்.

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு..!! ’இதே நிலைப்பாட்டில் உறுதியாக இருங்கள்’..!! சீமான்

சரியான நேரத்தில் மிகச்சரியாக முடிவெடுத்த முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகளும், நன்றியும்..! இதே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான தடையை நீதிமன்றத்திலும் உறுதி செய்ய, வலிமையான சட்டப்போராட்டம் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதோடு, இம்முடிவுக்கு ஆதரவாக தமிழக அரசுக்குத் துணைநிற்போமென உறுதியளிக்கிறேன்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

நீதிமன்றத்திற்கு சென்ற ’பொன்னியின் செல்வன்’ வழக்கு..!! நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

Thu Sep 29 , 2022
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் நடித்திருக்கும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நாளை நாடு முழுவதும் வெளியாகிறது. இந்தப் படத்தை அரசு மற்றும் தனியாரின் இணையத்தள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 2,405 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா […]

You May Like