fbpx

எடப்பாடி அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு செல்லும் முக்கிய புள்ளி?

எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானது முதல் அவருக்கு சாதகமாகவே அனைத்தும் இருந்தது இந்நிலையில் ஒவ்வொருவராக ஓ.பி.எஸ். அணிக்கு தாவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூத்த அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரன் ஓ.பி.எஸ். அணிக்கு சென்றார். இதைத்தொடர்ந்து மைத்ரேயனும் எடப்பாடி அணியில் இருந்து தாவினார். என்னடா ஒவ்வொரு விக்கெட்டா விழுதே என நினைக்கும் வேளையில் தற்போது மேலும் ஒரு குண்டு வெடிக்க உள்ளது.

கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும் ஓ.பி.எஸ். அணியில் சேரப்போவதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்தவர்களும் அதிக நம்பிக்கையுடன் பேசி வருகின்றனர். எனினும் இது தொடர்பான சலசலப்பு கருத்து குறித்துகேட்ட போது இல்லவே இல்லை என மறுத்துவிட்டார் முனுசாமி.

அதிமுக தலைமை தேர்ந்தெடுப்பதில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தமது அணி வெற்றி அடைவதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிக நம்பிக்கை உள்ளது. கடந்த ஜூலையில் நடைபெற்ற பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்கு மற்றும் தேர்தல் ஆணையத்திடம் உள்ள மனு ஆகிய இரண்டு வெற்றிகளும் கட்சி நமக்குத்தான் என்ற எண்ணத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சி.விசண்முகம் உள்ளிட்டோருடன் டெல்லி சென்ற இ.பி.எஸ். அமித்ஷாவை சந்தித்து பேசி இருக்கின்றார். நிர்வாகிகள் பலரும் நம்ம பக்கம்தான் இனி ஓ.பி.எஸ். கட்சியில் சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது  என்ற அளவிற்கு அமித்ஷாவிடம் கூறினாராம். ஆனால், தேர்தல் வருகின்றது அனைவரும் ஒற்றுமயாக செயல்பட்டு அதிமுகவை வெற்றி பெறச் செய்ய முயற்சி செய்ய வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி இருக்கின்றார்.

மைத்ரேயன் கொடுத்துள்ள சிக்னலை அடுத்து கே.பி.முனுசாமி, பொன்னையன்,எம்.சி.சம்பத் என ஒரு டஜனுக்கும் மேற்பட்ட இபிஎஸ் தரப்பு மூத்த நிர்வாகிகள் விரைவில் ஓபிஎஸ் இடம் ஐக்கியமாக அதிக வாயப்புள்ளது. பொதுக்குழு தொடர்பான வழக்கிலும் ஓபிஎஸ்சுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்பட்சத்தில், அதிமுக ஓபிஎஸ் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என்று அசாத்திய நம்பிக்கையுடன் சொல்கிறார் அவரது ஆதரவாளரான ஆவின் வைத்தியநாதன்.

ஆனால், ‘காய்ச்சல் காரணமாகவே தான் ஓரிரு வாரங்களாக வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகவும், அவ்வபோது அணி மாறும் அளவுக்கு தான் ஒன்றும் தரம் தாழ்த்து போய்விடவில்லை என்றும் காட்டமாக கூறியுள்ளார் கே.பி.முனுசாமி. அத்துடன் ஓபிஎஸ் அணிக்கு தான் போகமாட்டேன்’ எனவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளா

Next Post

எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ! உரிமையாளர் உயிர் தப்பினார்..

Thu Oct 13 , 2022
எலக்ட்ரிக் பைக் திடீரென திகு தீகுவென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் உரிமையார் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியில் அம்மன் நகரைச் சேர்ந்தவர் வரதராஜன். இவர் தனது எலக்ட்ரிக் பைக்கிற்கு சார்ஜ் போட்டுள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர் இணைப்பை துண்டித்துவிட்டு வேலைக்கு செல்வதற்காக ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்துள்ளார். ஆனால் வண்டி ஸ்டார்ட் ஆனதோடு திடீரென திகு திகுவென தீப்பற்றி வாகனம் முழுக்க […]

You May Like