fbpx

ANNAMALAI| “இதுதாங்க நேரம் இனி எல்லாம் மாறும்” “தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிச்சயம்” பாஜக அண்ணாமலை நம்பிக்கை பேட்டி.!

பாஜக தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை(Annamalai) என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாரதப் பிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா அரசின் சாதனைகளைக் கூறும் யாத்திரையை மேற்கொண்டு வருகின்றார். இந்த யாத்திரை நாளையுடன் முடிவடைய இருக்கிறது.

இதன் நிறைவு விழா பொதுக்கூட்டம் நாளை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வைத்து நடைபெற உள்ளது . இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். இது தொடர்பாக அண்ணாமலை சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசியிருக்கும் அவர் தனது என் மண் என் மக்கள் பயணத்தில் இதுவரை 232 தொகுதிகளை கடந்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார் .

மேலும் நாளை மறுநாள் திருப்பூரில் 233 மற்றும் 234 வது தொகுதிகளை கடந்து தனது யாத்திரையை நிறைவு செய்த பின்னர் பல்லடத்தில் நடைபெறும் யாத்திரையின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய இந்த யாத்திரையில் அரசியல் மாற்றத்திற்காக தன்னுடன் இணைந்த தாய்மார்கள் பொதுமக்கள் இளைஞர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடியின் சாதனை தமிழக பாஜகவினரின் உழைப்பு மற்றும் மாற்றத்தை விரும்பும் பொது மக்களின் ஆதரவு ஆகியோற்றால் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழக மக்கள் இந்தப் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயமாக அரசியல் மாற்றத்திற்கு ஆதரவாக இருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற இருக்கும் அரசியல் மாற்றம் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் போன்றோரின் வருங்காலத்திற்காக நடைபெறும் மாற்றமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுதாங்க நமக்கான நேரம் இனி எல்லாம் மாறும் என தெரிவித்த அண்ணாமலை பல்லடத்தில் அனைத்து மக்களையும் சந்திக்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

English Summary: There will be a political change in Tamil Nadu in the upcoming parliamentary elections. BJP leader Annamalai confident interview.

Read More: Jobs| 10th படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு.! சம்பளம் ரூ.20,200/- வரை.! உடனே அப்ளை பண்ணுங்க.!

Next Post

ADMK | அதிமுகவுடன் கைகோர்க்கும் பாமக.? இறுதிக்கட்ட பேச்சு வார்த்தைகள் தீவிரம்.! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Mon Feb 26 , 2024
2024 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது . தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, கடந்த தேர்தல்களில் பயணித்து அதே கூட்டணி கட்சிகளுடன் இந்த தேர்தலையும் எதிர்கொள்ள இருக்கிறது. திமுக கூட்டணியை பொறுத்தவரை தொகுதி பங்கீடு இறுதி கட்ட பேச்சுவார்த்தையை எட்டி இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் திமுக மற்றும் […]

You May Like