41 உயிர்களை பலி கொண்ட கரூர் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க தவெக தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ். மனு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அதே போல் கரூர் சம்பவத்தில் பலியான சந்திரா என்பவரின் கணவர் செல்வராஜ் சிபிஐ விசாரணை கோரி முறையீடு செய்துள்ளார்.
மேலும் கரூர் கூட்ட நெரிசலில் பலியான 13 வயது சிறுவனின் தந்தை பன்னீர் செல்வம் சிபிஐ விசாரணை கோரி முறையீடு செய்துள்ளார். கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரபாகரன் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார்..
இந்த 5 மனுக்களும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி, என்.வி அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது.. அப்போது தவெக தரப்பு, சென்னை உயர்நீதிமன்றம் தவெக தலைவர் விஜய் குறித்து பல்வேறு கருத்துகளை கூறியுள்ளது. வழக்கில் எதிர்மனு தாரராக இல்லாத ஒருவரை நீதிமன்றம் நேரடியாக விமர்சித்து உள்ளது. அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் தான் விஜய்யின் பிரச்சாரம் நடைபெற்றது..” என்று தெரிவித்தார்..
“தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சம்பவ இடத்தில் இருந்து விஜய் தப்பி ஓடவிட்டதாக கூறுவது தவறு.. காவல்துறையினரின் பாதுகாப்புடன் தான் விஜய் அந்த இடத்தில் இருந்து வெளியேறினார்.. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க தவெக நிர்வாகிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.. விஜய் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளால் அரசியல் ரீதியாக பின்னடைவு ஏற்பட்டுள்ளது..” என்று தவெக தரப்பு வாதிட்டது..
மேலும் மாநில காவல்துறை அதிகாரிகள் இருக்கும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கக் கூடாது.. அதில் உண்மை வெளிவராது.. எனவே ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என்றும் தவெக தரப்பு கோரிக்கை விடுத்தது.
இதை தொடர்ந்து நீதிபதிகள், தேர்தல் பரப்புரை வழிகாட்டு நெறிமுறை வழக்கு கிரிமினல் வழக்காக பதிவு செய்யப்பட்டது எப்படி என்று கேள்வி எழுப்பினர். உயிரிழப்பு அதிகமாக இருந்ததால் உயர்நீதிமன்ற பதிவாளர் வழக்கை கிரிமினல் வழக்காக பட்டியலிட்டார் என்று தமிழக அரசு தெரிவித்தது.. ஏற்கனவே இதே போன்றொரு வழக்கு நிலுவையில் இருக்கும் போது மற்ற மனுக்களில் சென்னை உயர்நீதிமன்றம் எப்படி உத்தரவிட்டது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்..
தமிழக அரசின் தரப்பு தனது வாதங்களை முன் வைத்தது.. அப்போது பாதிக்கப்பட்டவர்களை விஜய் இதுவரை சந்திக்கவில்லை என்று அரசு தரப்பு தெரிவித்தது.. விஜய் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு காரணம், நண்பகல் 12 மணிக்கு வருவதாக கூறிவிட்டு 41 பேர் பலி, 146 பேர் பலியானார்கள்.. ” என்று அரசு தரப்பு வாதிட்டது.
சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளையும் எப்படி இருவேறு உத்தரவுகளை பிறப்பித்தனர்.. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பின் தனி நீதிபதி விசாரித்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து இந்த வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
Read More : Breaking : கிட்னி முறைகேடு வழக்கு.. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்கமாட்டோம்.. உச்சநீதிமன்றம் அதிரடி..