“அரசியல் நாகரிகம் இல்ல.. ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்கவில்லை எனில்..” கொந்தளித்த செல்வப்பெருந்தகை..!

rajendra balaji selva perunthagai

நேற்று விருதுநகரில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.. அப்போது பேசிய அவர் “ பீகாரில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.. எனவே காங்கிரஸ் கட்சியை கலைத்து விடலாம்.. இன்று இருக்கும் காங்கிரஸ் நேரு காந்தி ஆரம்பித்த காங்கிரஸ் கிடையாது.. இன்று இருக்கும் காங்கிரஸ் நாட்டை காட்டிக் கொடுக்கும் காங்கிரஸ்.. தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் செய்யும் காங்கிரஸ்.. நாட்டை பற்றிய கவலை எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது.. திமுக தான் காங்கிரஸ் கட்சியை தூக்கி பிடித்துள்ளது.. கீழே போட்டுவிட்டால் காங்கிரஸால் எழுந்திருக்கவே முடியாது..” என்று தெரிவித்தார்..


இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசியல் நாகரிகம் இல்லாதவர்.. அக்கட்சி தலைவர் இதுபோன்ற நாகரிகமற்ற பேச்சுகளை கண்டிக்க வேண்டாமா? அதிமுகவுக்கு என்ன வரலாறு உள்ளது? அதிமுக தொடங்கப்பட்டு 53 ஆண்டுகளில் அதிமுக எத்தனை தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது..

காங்கிரஸ் தொடங்கப்பட்டு 140 ஆண்டுகள் ஆகிறது.. காங்கிரஸ் மக்களுக்கான இயக்கம்.. யாரை டாடி என்று கூப்பிடுவது என்று தெரியவில்லை.. நாம் எல்லோரும் வீட்டில் உள்ளவர்களை தான் டாடி என்று கூப்பிடுவோம்.. அந்த பண்பு கூட இல்லாத ஒரு நபர் காங்கிரஸ் பேரியக்கம் பற்றியும், ராகுல்காந்தி பற்றியும் அவதூறாக பேசுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.. நாவடக்கம் வேண்டும்.. நாங்கள் நாகரிகமாக பேசுகிறோம்.. நாங்கள் பேசினால் தாங்கமாட்டீர்கள். 1996 தேர்தல் அதிமுக எத்தனை சீட் வாங்கியது? ராஜேந்திர பாலாஜி பதில் சொல்ல வேண்டும்.. பீகாரில் நாங்கள் முதன்மை கட்சி இல்லை.. பீகாரில் லாலு பிரசாத் யாதவ்வின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தான் முதன்மை கட்சி..

ஆனால் தமிழ்நாட்டின் முதன்மை கட்சி தம்மட்டம் அடித்த அதிமுக 1996 படுதோல்வி அடைந்தது.. அந்த தேர்தலில் நின்ற ஜெயலலிதா வெற்றி பெற்றாரா? அன்று நாங்கள் அதிமுகவை கலைத்துவிடுங்கள் என்று சொன்னோமா? தலைவர்களை வீட்டிற்கு போங்கள் என்று சொன்னோமா? இதுதான் காங்கிரஸுக்கும் அதிமுகவுக்கும் உள்ள வித்தியாசம்.. இப்படி நாகரிகம் அறியாமல், உலக வரலாறு, இந்திய வரலாறு தெரியாமல், அரசியல் கட்சிகளின் வரலாறு தெரியாமல் முன்னாள் அமைச்சர் பேசுகிறார் என்றால் இபிஎஸ் கண்டித்திருக்க வேண்டாமா?

அவர்கள் செய்வது நாகரிகமற்ற அரசியல்.. இன்னும் கர்நாடகாவிலும், தெலங்கானாவிலும் காங்கிரஸ் கட்சி தான் உள்ளது.. இப்படி நாகரிகமற்ற முறையில் பேசக் கூடாது.. காங்கிரஸ் வரலாற்றை தெரியாமல் பேசிய ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும்.. தனது பேச்சை திரும்ப பெற வேண்டும்.. இல்லை எனில் நாங்கள் போராட்டம் அறிவிப்போம்..” என்று தெரிவித்தார்..

Read More : Flash : அனைத்து கூட்டங்களுக்கும் தவெகவுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.. விஜய் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்..

RUPA

Next Post

மீண்டும் ஆட்டத்தை தொடங்கும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை மையம் முக்கிய தகவல்..!

Sat Nov 15 , 2025
தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று வரும் 18-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி […]
Rain 2025

You May Like