ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்..! பொங்கல் பரிசுத்தொகுப்பு..! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

pongal gift

புதுச்சேரியில் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது


தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு, புதுச்சேரியில் வெகு விமரிசையாக கொண்டாப்படுகிறது.. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.. பச்சரிசி, சர்க்கரை, கருப்பு ஆகியவற்றுடன் சில ஆண்டுகளில் ரொக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.. தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரியில் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.. 4 கிலோ பச்சரிசி, நாட்டுச்சர்க்கரை, பாசிபருப்பு, 300 கிராம் நெய், 1 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. அரசு ஊழியர்கள், கௌரவ ரேஷன் அட்டைதாரர்கள் தவிர அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகுப்பு தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த பரிசுத்தொகுப்பு வரும் ஜனவரி 3-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : 2026 தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க இபிஎஸ்-க்கு முழு அதிகாரம்.. அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்..!

RUPA

Next Post

'எல்லோரும் இந்தி பேசுவதில்லை': இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையை பாராட்டிய புடின்!

Wed Dec 10 , 2025
தனது சமீபத்திய பயணத்தை நினைவு கூர்ந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையைப் பாராட்டினார். “நான் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்தேன். சுமார் 1.5 பில்லியன் மக்கள் அங்கு வசிக்கிறார்கள், அனைவரும் இந்தி பேசுவதில்லை, ஒருவேளை 500–600 மில்லியன் பேர் இந்தி பேசுகிறார்கள், மீதமுள்ளவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள். பெரும்பாலும், அவர்கள் ஒருவருக்கொருவர் பேசுவதை புரிந்து கொள்ள மாட்டார்கள். எனவே, இந்த ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மை […]
putin modi

You May Like