திமுக துணைப் பொதுச்செயலாளராக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. கடந்த ஏப்ரல் மாதம் பொன்முடி திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் திமுக துணை பொதுச்செயலாளராக அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் அறிவித்துள்ளார். திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இல. பத்மநாபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த நிலையில் தற்போது கிழக்கு பொறுப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்..
திமுக நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம் வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.. திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வேலூர் தெற்கு திமுக மாவட்ட பொறுப்பாளராக ஏ.பி நந்தகுமார் நியனமம் செய்யப்பட்டுள்ளார் என்று துரைமுருகன் அறிவித்துள்ளார்..
Read More : 3 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? வானிலை மையம் தகவல்..!



