ஆந்திர மாநிலம் நந்தியாலில் உள்ள ஒரு பிள்ளையார் கோயிலில் பூசாரியாக இருந்த சாய்நாத் சர்மா (38), தனது மனைவி ஸ்ரீஷா (35) மற்றும் 18 வயது மகளுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று சாய்நாத் சர்மாவின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர்.
அப்போது, ஸ்ரீஷா கழுத்தறுக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, காவல் நிலையம் வந்த சாய்நாத் சர்மா, தனது மனைவியை கொலை செய்ததாக கூறி போலீசில் சரணடைந்தார்.
இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஸ்ரீஷா ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு, பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்துள்ளது. அரசு வேலை, வங்கி கடன் வாங்கித் தருவதாகக் கூறி, சுமார் ரூ.50 லட்சம் வரை பணம் வசூலித்து ஏமாற்றியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சாய்நாத் சர்மாவின் வீட்டிற்கு வந்து புகார் கூறியபோதுதான், அவருக்கு மனைவியின் செயல் குறித்து தெரியவந்துள்ளது.
மனைவியிடம் கேட்டபோது, அவள் தான் அப்படித்தான் இருப்பேன். நானே பார்த்துக் கொள்கிறேன் என ஆணவமாக பேசியுள்ளார். மேலும், ஸ்ரீஷாவின் செல்போனை சோதித்தபோது, பல ஆண்களுடன் அவர் அநாகரிகமாக பேசிய ஆடியோக்களும், நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் கிடைத்துள்ளன.
மோசடி மற்றும் கள்ளக்காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த சாய்நாத் சர்மா, வீட்டில் இருந்த கத்தியால் ஸ்ரீஷாவின் மார்பகத்தில் பலமுறை குத்தி, கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். இந்த கொடூர கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



