RSS-க்கு அஞ்சல் தலை.. அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் சாடல்!

modi stalin

RSS இயக்கத்தின் நூற்றாண்டைக் குறிக்கும் வகையில் அஞ்சல் தலையும், சிறப்பு நாணயமும் வெளியிடப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்! மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர்.


நம் தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் RSS இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும்! இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி!” என்று குறிப்பிட்டுள்ளார்..

RUPA

Next Post

மாதம் ரூ.3 ஆயிரம் சேமித்தால்.. 24 லட்சம் உங்களுடையது..!! இந்த சேமிப்பு திட்டம் பற்றி தெரியுமா..?

Thu Oct 2 , 2025
If you save Rs.3 thousand per month.. 24 lakhs is yours..!! Do you know about this savings plan..?
Small Savings Schemes 1

You May Like