மாதம் ரூ.9,250 லாபம் தரும் அசத்தலான போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. அத பத்தி தெரியுமா..?

Post Office Special Scheme.jpg

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வங்கிகளுக்கு இணையாக அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் வங்கியை விட சிறந்த லாபத்தை அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் கொடுக்கிறது. சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி தொகை கிடைப்பதால் முதிர்வு காலத்தில் சேமிப்புடன் சேர்த்து கூடுதல் வட்டித்தொகையும் கிடைக்கிறது. இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஏற்ப மாறுபடுகிறது. ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலக திட்டங்கள் நல்ல பலனை அளிக்கிறது.


அஞ்சலக சேமிப்பு திட்டம் ஒன்றில் மக்கள் இணைவதன் மூலம் மாதம் குறைந்தபட்சம் ரூ.5,550 முதல் அதிகபட்சமாக ரூ.9,250 வரை பெற முடியும். இந்த பயன் கிடைக்க வேண்டும் என்றால் மக்கள் பிஓஎம்ஐஎஸ் எனும் தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டத்தில் (Post Office Montly Income Scheme or POMIS) இணைய வேண்டும். இது 5 ஆண்டு சேமிப்பு திட்டமாகும்.

இந்த திட்டத்தை பொறுத்தமட்டில் சிங்கிள் அக்கவுண்ட் மற்றும் ஜாயிண்ட் அக்கவுண்ட் என்ற 2 வகைகள் உள்ளன. ஜாயிண்ட் அக்கவுண்ட் முறையில் அதிகபட்சமாக 3 பேர் இணைய முடியும். சிங்கிள் அக்கவுண்ட் திட்டம் என்றால் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரையும், ஜாயிண்ட் அக்கவுண்ட் திட்டம் என்றால் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் 5 ஆண்டுகளில் நாம் முதலீடு செய்து சேமிக்கலாம்.

இந்த சேமிப்பு திட்டத்துக்கு தற்போது 7.4 சதவீதம் ஆண்டு வட்டியை அரசு வழங்கி வருகிறது. இந்த வட்டித்தொகையை 5 ஆண்டுக்கு பிறகு பயனாளர்கள் ஒவ்வொரு மாதமும் பெற முடியும். அதன்படி ஜாயிண்ட் அக்கவுண்ட்டில் ஒருவர் 5 ஆண்டில் ரூ.15 லட்சத்தை சேமித்தால் செய்தால் அவருக்கு ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி கிடைக்கும். அதாவது ஆண்டுக்கு ரூ.1.11 லட்சம் வட்டியாக கிடைக்கும்.

இதனை 12 மாதங்களுக்கு பிரித்து பார்த்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 கிடைக்கும். இதனை அவர்கள் மாதந்தோறும் எடுத்து கொள்ள முடியும். மாறாக சிங்கிள் அக்கவுண்ட் முறையில் ரூ.9 லட்சம் முதலீடு செய்தால் ஆண்டுக்கு ரூ.66,600 வட்டியாக கிடைக்கும். அதன்படி பார்த்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.5,550யை பெற முடியும்.

ஒருவேளை இந்த வட்டித்தொகையை மாதந்தோறும் நாம் எடுக்காத பட்சத்தில் அது அசல் தொகையுடன் சேரும். அதுமட்டுமின்றி அசல் தொகையுடன் சேரும் வட்டி தொகைக்கும் கூட வட்டி கிடைக்கும். இதனால் இந்த திட்டம் என்பது மக்களுக்கு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.

Read more: Flash: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 5 பேர் உடல் சிதறி பலி..!! மற்றவர்களின் நிலை என்ன..?

English Summary

Postal Savings Plan that gives a profit of Rs. 9,250 per month..

Next Post

தொடரும் மர்மம்.. யாராலும் வெல்ல முடியாத ஒரே கோட்டை.. எங்குள்ளது தெரியுமா?

Tue Jul 1 , 2025
இந்தியாவில் பல வரலாற்று கோட்டைகள் ஆழமான மர்மங்களை கொண்டுள்ளன. இங்கு ஆட்சி செய்த மன்னர்கள் தங்கள் ராஜ்ஜியத்தைப் பாதுகாக்க கோட்டைகளைக் கட்டினார்கள். இது மிகவும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த கோட்டைகள் இந்தியாவின் வளமான கடந்த காலத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகின்றன. ஒவ்வொன்றும் தனித்துவமான அம்சங்கள் மற்றும் வரலாற்றுக் கதைகளைப் பெருமைப்படுத்துகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருத் என்ற கடலோர கிராமத்தில் அமைந்துள்ளது. இது […]
1430801 murud janjira fort freshwater well in the indian fort which is located in the ocean

You May Like