வாழ்க்கையில் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் நம்மால், பணப் பிரச்சனைகளை மட்டும் அவ்வளவு எளிதில் சமாளித்துவிட முடிவதில்லை. ஒவ்வொருவரது ஜாதகக் கட்டத்தின் அமைப்பைப் பொறுத்தே இல்லத்தில் பணத் தட்டுப்பாடுகளும், பொருளாதாரச் சிக்கல்களும் ஏற்படுகின்றன. இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு, பண வரவும் செல்வ வளமும் சிறக்க, ஒவ்வொரு பௌர்ணமியிலும் கடைபிடிக்க வேண்டிய ஓர் எளிய மற்றும் சக்திவாய்ந்த ஆன்மீக வழிபாட்டு முறையைப் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்.
செல்வ வளம் தரும் எளிய பௌர்ணமி பூஜை :
* பௌர்ணமி அன்று அதிகாலையிலேயே விரதத்தை தொடங்கி, எளிய உணவுகளை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டில் பூஜை செய்ய வேண்டும்.
* இரண்டு மண் அகல் விளக்குகளில் சுத்தமான பசு நெய் ஊற்றி, தாமரைத் தண்டுத் திரி போட்டுத் தீபம் ஏற்ற வேண்டும்.
* நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியையும், சந்திர அம்சமுடைய கடவுளர்களையும் வணங்கும்போது, நம்முடைய முன்வினைப் பாவங்களும் ஜோதிட தோஷங்களும் நீங்கி, சுபிட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
* மேலும், அன்றைய நாளில் புத்தம் புதிய மலர்களால் உங்களுக்குப் பிடித்த தெய்வம் அல்லது குலதெய்வத்தை அலங்கரித்துக் கொள்ளுங்கள். பின்னர் இனிப்பு வகைகள், பழங்கள் போன்றவற்றை நைவேத்தியமாகப் படைக்கலாம்.
* பால் போன்ற நிலவின் ஒளியைப் பிரதிபலிக்கும் வகையில், ஒரு டம்ளர் பால் வைத்து, அதில் சிறிதளவு ஏலக்காயைச் சேர்த்து நைவேத்தியம் செய்யுங்கள். ஏலக்காய் சேர்ப்பது மகாலட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும்.
* இரவு சந்திரன் உதயம் ஆனதும், உங்கள் விரதத்தை நிறைவு செய்து, சந்திரனின் அருள் கிடைத்த அந்தப் பாலை வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் பருகக் கொடுக்கலாம்.
* இந்த எளிய வழிபாடு முறையை ஒவ்வொரு பௌர்ணமி தோறும் தவறாமல் கடைபிடிப்பவர்களுக்குத் தீராத பணக் கஷ்டங்கள் நீங்கி, செல்வ வளம் கொழிக்கத் துவங்கும்.
* மேலும், அன்றைய நாளில் யாரேனும் ஒருவருக்காவது அன்னதானம் செய்வது மிகச் சிறந்த பரிகாரமாகும்.
* முடிந்தால், அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று நவகிரக சன்னிதியில் இருக்கும் சந்திர பகவானுக்கு வெண்பொங்கல் நைவேத்தியம் செய்து, மாலை வேளையில் பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.
* தொழில் ரீதியான பிரச்சனைகள், பொருளாதார நெருக்கடிகள் என எத்தகைய சிக்கலில் இருப்பவர்களும் இந்த எளிய பௌர்ணமி வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்து நல்ல பலன்களை பெறலாம்.
Read More : HCL நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! நாளை நேர்காணல்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! விவரம் உள்ளே..!!