தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கி உள்ளன.. இந்த முறை தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. இவை தவிர தேமுதிக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இன்னும் தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை..
திமுக ஏற்கனவே கூட்டணி தொடர்பான பணிகளை தொடங்கி விட்டது.. மேலும் பல்வேறு கட்சி தலைவர்களும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.. அதிமுக ஒருங்கிணைப்பாளர் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்தார்..
அந்த வகையில் தேமுதிக பொதுச்செயலாளர் உள்ளம் தேடி, இல்லம் நாடி என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பிரேமலதா இன்று நீலகிரிக்கு சென்றார்.. அப்போது குன்னூரில் உள்ள தேமுதிக மாவட்ட செயலாளர் பத்மநாபன் வீட்டிற்கு சென்றிருந்தார்.. அப்போது படுகர் பாரம்பரிய நடனமாடி பிரேமலதாவை வரவேற்றனர்.. தொடர்ந்து பிரேமலதா படுகர் இன மக்களின் பாரம்பரிய உடை அணிந்து அவர்களுடன் உற்சாகமாக நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்..



