பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார்.. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.. இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மோடி அதில் உரையாற்ற உள்ளார்.
இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார்.. மதியம் 2.15 மணிக்கு பிரதமர் சென்னை வருவார் என்று கூறப்பட்ட நிலையில் அவரின் வருகை சற்று தாமதமானது.. மதியம் 2.40 மணியளவில் அவர் சென்னை வந்தடைந்தார்.. பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் அன்பரசன் ஆகியோர் வரவேற்றனர்.. பொதுக்கூட்டம் நடைபெறும் மதுராந்தகம் பகுதிக்கு பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டார்.. அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்..
இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் என்.டி.ஏ பொதுக்கூட்டம் தொடங்க உள்ளது.. இந்த பொதுக்கூட்டத்தில் என்.டி.ஏ கூட்டணி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.. இந்த கூட்டத்தில் இபிஎஸ், அன்புமணி, டிடிவி தினகரன் ஆகியோர் ஒரே மேடையில் இடம்பெற உள்ளனர்.. தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..
Read More : இது எல்லாத்தையும் மறந்துட்டீங்களா? CM ஸ்டாலினுக்கு லிஸ்ட் போட்டு பதிலடி கொடுத்த அண்ணாமலை..!



