தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்காக பிரதமர் கோவை வருகை தந்துள்ளார்.. பிஎம் கிசான் திட்டத்தின் 21-வது தவணையாக ரூ.18,000 கோடி நிதியை கோவை விழாவில் பிரதமர் மோடி விடுவிக்க உள்ளார்..
தனி விமானம் கோவை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜி.கே வாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.. விழா நடைபெறும் கோவை கொடிசியா மைதானத்திற்கு காரில் சென்ற பிரதமருக்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. பிரதமர் மோடி கார் மீது மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..
இதை தொடர்ந்து கோவை கொடிசியா வளாகத்தில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.. கண்காட்சியை தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்ட பிரதமர், விளைப் பொருட்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.. மேலும் இயற்கை வேளாண்மையை பின்பற்றும் விவசாயிகள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.. மேலும் இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடனும் பிரதமர் மோடி உரையாடினார்..
Read More : தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு.. இதற்கு நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டாமா? முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி..



