தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பெயரில் திமுக மகளிரணி மாநாடு நடைபெற்று வருகிறது.. திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டிற்கு வந்த முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்..
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கே.என்.நேரு, கோவி. செழியன் மற்றும் பல நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்..
இந்த மாநாட்டில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் “ ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் திராவிட இயக்கத்தின் தொட்டில் என்று கூறுவார்கள்.. மற்ற இயக்கங்களில் ஒரு வருடத்திற்கு ஒரு முறை அல்லது 2 வருடத்திற்கு ஒரு மாநாடு நடத்துவார்கள்.. ஆனால் திமுக மட்டும் தாம் மாதத்திற்கு ஒரு மாநாடு, சந்திப்பை நடத்தி வருகிறது..
இந்தி திணிப்பிற்கு எதிராக பெண்களை திரட்டி போராடியவர்கள் இந்த மண்டலம்.. தேர்தல் எப்போது வந்தாலும் ஒன்றிய பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருவார்.. அப்படி 2 நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி தமிழகம் வந்த போது, தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறினார்.
பிரதமர் மோடி அவர்களே மைக் என்று நினைத்து நீங்கள் கண்ணாடியை பார்த்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.. 2023-ல் பாஜக ஆட்சியில் இருந்த போது மணிப்பூரில் ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானர்கள்.. பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று ஆட்சி கலைக்கப்பட்டு ஒரு ஆண்டாக குடியரசு தலைவர் ஆட்சி நடைபெறுகிறது.. 2002-ம் ஆண்டும் இதே பிரதமர் மோடி அவர்கள் குஜராத்தின் முதல்வராக இருந்த போது முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறை நடத்தினர்.. அதில் அதிகமாக பாதிக்கப்பட்டத் பெண்கள் தான்.. பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண் சங்கிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.. காஷ்மீரில் ஆசிஃபா என்ற சிறுமி பாலியல் வன்கொடுமை.. இப்படி பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.. இப்படி குற்றவாளிகளுக்கு ஆதரவு கொடுக்கும் கேடுகெட்ட கட்சி தான் பாஜக..
இந்தியாவில் பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்லும் மாநிலம் தமிழ்நாடு.. அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடப்பது உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம்.. இந்த மாநிலங்களிலும் ஆட்சியில் இருப்பது பாஜக அரசு. பெண்களுக்கு இவ்வளவு கொடுமைகளை செய்து விட்டு, தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுவது வெட்கமாக இல்லையா என்று தமிழக பெண்கள் கேட்கின்றனர்..
பழைய அடிமைகள் மட்டுமில்லாமல், புதுப்புது அடிமைகளும் உருவாகி உள்ளனர்.. எத்தனை பேர் வந்தாலும் திமுகவை தொட்டு கூட் பார்க்க முடியாது.. முரட்டு பக்தர்கள் முரட்டு அடிமையாக இருக்கிறார் இபிஎஸ்.. நமது திராவிட மாடல் அரசு பெண்களுக்கான அரசு.. அதற்கு இங்கு வந்திருக்கும் பெண்கள் தான் உதாரணம்.. நமது கழகம் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும்.. நமது தலைவர் மீண்டும் 2-வது முதல்வராக வேண்டும்.. நமது திராவிட மாட பார்ட் 2-வுக்கு மக்கள் தயாராகிவிட்டனர்.. நாம் தான் மீண்டும் வெல்வோம்.. மீண்டும் வருவோம்.” என்று தெரிவித்தார்..



