Job: தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்பு திட்டம்… நாளை நடைபெறும் சிறப்பு முகாம்..!

Job 2025 3

பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம் நாமக்கல் மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ளது.

தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டம் (NAPS) மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பாக, நாமக்கல் மாவட்ட அளவில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், கீரம்பூர், நாமக்கல் வளாகத்தில் 11.08.2025 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை) நடைபெற உள்ளது.


அரசு / தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஐ.டி.ஐ (ITI) பயின்று வெற்றிகரமாக பயிற்சியினை நிறைவு செய்து இதுநாள் வரை தொழிற்பழகுநர் பயிற்சியினை மேற்கொள்ளாத பயிற்சியாளர்கள் தங்களது கல்விச் சான்றிதழ், சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு போட்டோ- 2 எண்கள், ஆதார் அட்டை, தேசிய /மாநில தொழிற்சான்றிதழ் (COE தொழிற்பிரிவு சான்றிதழ்கள் உட்பட) ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் பங்கேற்று தொழிற்பழகுநர்களாக சேர்ந்து பயன்பெறலாம்.

தொழிற்பழகுநர் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிற்நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் காலியாக உள்ள தொழிற்பழகுநர் இடங்களை, இம்முகாமில் நேரடியாக பங்கேற்று தொழிற்பழகுநர்களை தேர்வு செய்து பயன்பெறலாம். மேலும், விவரங்கள் அறியும் பொருட்டு உதவி இயக்குநர். மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மூன்றாம் தளம், அறை எண் -304-306, மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், நாமக்கல் -637003 அவர்களை நேரிலும் மற்றும் தொலைபேசி (04286-290297, 94877 45094) வாயிலாகவும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மக்கள்...! தீபாவளி ரயில் கட்டணத்தில் 20% தள்ளுபடி...! எப்படி டிக்கெட் முன்பதிவு செய்வது...?

Sun Aug 10 , 2025
கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், தடை இல்லாத முன்பதிவுகளை உறுதி செய்யவும், பயணிகளுக்கு அதிக வசதி செய்து தரவும், பண்டிகை காலங்களில் அதிக தூரம் பயணிக்கும் பயணிகளின் போக்குவரத்தை வசதியானதாக மாற்றவும் ரயில்வே முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சிறப்பு ரயில்கள் உட்பட இரு வழித்தடங்களிலும் ரயில்களின் சீரான இயக்கத்தை உறுதி செய்யவும், தள்ளுபடி கட்டணத்தில் பண்டிகை பயண தொகுப்புத் திட்டத்தை சோதனை அடிப்படையில் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்வரும் விவரங்களின்படி அதில் […]
irctc shares in focus as indian railways to hike passenger fares from july 1 1

You May Like