பரோலில் வந்த கைதி..!! ஹாஸ்பிட்டலில் காதலியுடன் உல்லாசம்..!! காவலுக்கு நின்ற போலீஸ்..!! கதிகலங்கிபோன ஆந்திரா..!!

Andhra 2025

ஆந்திர மாநிலத்தில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெறும் கைதி, பரோலில் வெளியே வந்தபோது, காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பதி மாவட்டம் கூடூரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் டாஸ்மாக்கில் மேலாளராக பணிபுரிந்து வந்தவரை கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 2010ஆம் ஆண்டு முதல் நெல்லூர் மத்திய சிறையில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார். இந்த வழக்கில் ஒரு திருப்பமாக, கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி, அவர் சிறையில் இருந்து தப்பினார். பின்னர், 2018இல் போலீசாரால் மீண்டும் பிடிபட்டு அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சமீபத்தில் ஸ்ரீகாந்த் பரோலுக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், நெல்லூர் மற்றும் திருப்பதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் ஸ்ரீகாந்தை பரோலில் வெளியே விட்டால், மேலும் குற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, திருப்பதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஸ்ரீகாந்த், காவல்துறை அனுமதியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதாவது, இருசக்கர வாகனம் மோதியதில், அவருக்கு கையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் தனது காதலி அருணாவுடன் கொஞ்சி விளையாடி உல்லாசமாக இருந்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. ஸ்ரீகாந்த் சிறையில் இருக்கும்போது, அவரது ரவுடி கும்பலை அருணா தான் கவனித்து வந்துள்ளார். பரோல் வெளியே வந்து சிகிச்சை பெற்ற ஸ்ரீகாந்தின் செயல் குறித்து தற்போது விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அவருக்கு பரோல் கிடைக்க சில போலீஸ் உயரதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் உதவியதாக கூறப்படும் நிலையில், அதுகுறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Read More : சொந்தமா தொழில் தொடங்க ஆசையா..? தற்போதைய டிரெண்டிங் பிசினஸ் எது..? வருமானம் அள்ளலாம்..!!

CHELLA

Next Post

3 திருமணம்.. அடங்காத ஆசை..!! கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்..!! கதறி அழுத மகள்..!! கடைசியில் நடந்த பயங்கரம்..!!

Tue Aug 19 , 2025
பஞ்சாப் மாநிலத்தில் 3-ஆவது திருமணம் செய்துகொண்டு காதலனுடன் இளம்பெண் ஓடிய நிலையில், அவரது 6 வயது மகளை தாத்தா – பாட்டியே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியிருக்கிறது. காதலனுடன் செல்லும் முன் அந்த இளம்பெண், தன்னுடைய 6 வயது மகளை பெற்றோரிடம் விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், தாயைக் காணாததால் அந்த சிறுமி அடம் பிடித்துள்ளார். […]
Love 2025 1

You May Like