தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் தான் பிரியா பவானி சங்கர். இவர் 2017ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சீரியல்களில் நடித்து தற்போது ஒரு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தனக்கென ஒரு பாணியில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவதால் இவருக்கு தனியாக ரசிகர்களே உள்ளனர்.
தற்போது விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 68 படத்தில் பிரியா பவானி ஹீரோயினாக நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை. இந்நிலையில், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை படத்தில் பிரியா பவானி நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில், பிரியா பவானி எஸ்ஜே.சூர்யா இடையே ரொமான்ஸ் லிப் லாக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் நீங்களா இப்படி பன்னுறது என ஷாக்காகி உள்ளனர். காரணம் பிரியா பவானி சங்கர் மிகவும் அடக்க ஒடுக்கமாக நடிப்பார் என்பதுதான். தற்போது இந்த ட்ரைலர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.