கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமாரி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், என்னுடைய உறவினர் புஷ்பம் என்பவருக்கு, சொந்தமாக விருதுநகர் மாவட்டம் மீஞ்சூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் இருந்தது. அவர் இறந்த பின்பு அந்த சொத்தை அவருடைய மகன் விஜய் ஆண்டனி, தனது பெயருக்கு மாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால் சொத்து ஆவணங்கள் மாயமானது.
இதையடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் விருதுநகர் மாவட்ட பொது தகவல் அதிகாரியிடம் ஆவணங்களை கோரிய விஜயகுமாரிக்கு, உரிய பதிலோ ஆவணங்களோ வழங்கப்படவில்லை. பின் அவர் மாவட்ட ஆட்சியரிடம், மாநில தகவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். மாநில தகவல் ஆணையம், தாசில்தார் அலுவலகத்தில் ஆவணங்களை ஆய்வு செய்ய அனுமதி வழங்க உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், அவற்றை மேற்கொள்வதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி, ஆவணங்களை வழங்க மறுத்துள்ளனர். இந்த வழக்கு மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதி பாலாஜி முன் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர், பொது பதிவுகள் அனைத்தும் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பராமரிக்கப்படும். பல்வேறு காரணங்களால் அவை அழிந்துபோக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். இதனை நீதிபதி அதனை முழுமையாக நிராகரித்தார்.
நீதிபதி கூறியதாவது: “சொத்து ஆவணங்கள் என்பது நிரந்தரமாக பாதுகாக்க வேண்டியவை. அவை தொலைந்துவிட்டன, அழிக்கப்பட்டுவிட்டன என்பதற்கான காரணம் ஏற்க முடியாது. இது போல அரசு அலுவலகங்களில் ஏற்பட்ட அலட்சியமான நடவடிக்கைகள், பொதுமக்களின் உரிமைகளை பாதிக்கும்.” என தெரிவித்தனர்.
மேலும் நீதிமன்ற உத்தரவில், சம்பந்தப்பட்ட ஆவணங்களை 8 வாரத்துக்குள் தயார் செய்ய வேண்டும். மனுதாரருக்கு தேவையான தகவல்களை வழங்க வேண்டும். தகவலளிக்க தவறியதற்காக பொது தகவல் அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றபடி கருத்துரையும் வழங்கப்பட்டுள்ளது.
Read more: WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் மரணத்திற்கு என்ன காரணம் ..?