ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் முடிவை இந்தியா இன்று மீண்டும் ஒருமுறை ஆதரித்து, “நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் ” இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் நிலையான முன்னுரிமையாக இருந்து வருவதாக தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி விரைவில் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக தனக்கு உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த தகவலை தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் இறக்குமதிக் கொள்கைகள் நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்கான நோக்கத்தால் வழிநடத்தப்படுகின்றன என்று கூறினார். இருப்பினும், இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுவின் குறிப்பிடத்தக்க இறக்குமதியாளராக உள்ளது..” அவர் குறிப்பிட்டார்.
“நிலையான எரிசக்தி விலை மற்றும் பாதுகாப்பான விநியோகங்களை உறுதி செய்வது நமது எரிசக்திக் கொள்கையின் இரட்டை இலக்குகளாகும். இதில் நமது எரிசக்தி ஆதாரங்களை விரிவுபடுத்துவதும், சந்தை நிலைமைகளைப் பூர்த்தி செய்ய பொருத்தமான வகையில் பல்வகைப்படுத்துவதும் அடங்கும்.” என்றும் தெரிவித்துள்ளார்..
Read More : ”அமெரிக்காவையும், ட்ரம்பையும் பார்த்து மோடி பயப்படுகிறார்..” ராகுல் காந்தி சாடல்..



