“தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் பெருமிதம்..” பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து..!

pm modi in veshti

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்! பொங்கல் திருநாளை முன்னிட்டு தங்களுக்கும். தங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன். மனிதனின் உழைப்பிற்கும், இயற்கையின் இசைவிற்கும் இடையே
உள்ள தெருங்கிய தொடர்பை இந்த சிறப்புவாய்ந்த பண்டிகை நமக்கு நினைவூட்டுகிறது. வேளாண்மை, கடினமாக உழைக்கும் நமது விவசாயிகள், கிராமப்புற வாழ்க்கைமுறை மற்றும் கண்ணியமான வேலை ஆகியவற்றுடன் இந்தப் பண்டிகை ஆழமாக பிணைந்துள்ளது.


குடும்பத்தினர் ஒன்றிணைந்து. பாரம்பரிய உணவுகளை சமைத்து, மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்து கொள்கின்றனர். இதன் மூலம் தலைமுறைகளைக் கடந்து, உறவுகள் வலுப்பெறுவதுடன், ஒற்றுமை உணர்வு மேலோங்குகிறது. தங்களது கடின உழைப்பின் மூலம் நமது வாழ்க்கையை செம்மைப்படுத்துவோருக்கு நன்றி தெரிவிக்கும் திருநாளாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
வளமான தமிழ் பாரம்பரியங்களின் உன்னதமான அடையாளமாக
பொங்கல் பண்டிகை திகழ்கிறது.

உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். பொங்கல் பண்டிகை, சாவதேசத் திருவிழாவாகக் கொண்டாடப்படுவது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மட்டுமின்றி. உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களாலும்
இந்தப் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

மீண்டும் உங்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தைத்திருநாள் அனைவரின் வாழ்விலும் அபரிமிதமான செழிப்பு, வெற்றி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை கொண்டுவரட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More : ரயில் டிக்கெட்டை இப்படி புக்கிங் செய்தால் 3% தள்ளுபடி..!! இன்று முதல் அமல்..!! இந்திய ரயில்வே அதிரடி..!!

RUPA

Next Post

உஷார்..! காரில் வைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிக்கிறீங்களா? இது உயிருக்கே ஆபத்து!

Wed Jan 14 , 2026
பலருக்குத் தங்கள் காரில் தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொண்டு, தேவைப்படும்போதெல்லாம் அதைக் குடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் சிலர், தங்களுக்குத் தாகம் எடுக்கும்போது தண்ணீர் இல்லாத சூழ்நிலையில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதற்காக, பழைய தண்ணீர் பாட்டிலை காரில் வைத்திருப்பார்கள். ஆனால், ஒரே தண்ணீர் பாட்டிலில் மீண்டும் மீண்டும் தண்ணீர் குடிப்பது எவ்வளவு பாதுகாப்பானது என்பது பலருக்கும் தெரிவதில்லை. காரில் உள்ள பழைய தண்ணீரைக் குடிப்பது உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் என்று நிபுணர்கள் […]
water bottle

You May Like