ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.. இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் புவியை கண்காணிப்பதற்கான EOS N1 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது.. இது EOS-N1 எனப்படும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் அதனுடன் சேர்த்து மேலும் 14 துணை செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.
இந்த நிலையில் இந்த திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.. நான்காவது கட்டத்தில் (PS4) ஒரு கோளாறு ஏற்பட்டதை இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, ராக்கெட் திட்டமிடப்பட்ட பயணப் பாதையிலிருந்து விலகிச் சென்றது. இதற்கான காரணத்தைக் கண்டறிய விண்வெளி நிறுவனம் தற்போது விமானத் தரவுகளை ஆய்வு செய்து வருகிறது.
மூன்றாவது கட்டத்தில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக, இந்தத் திட்டம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பின்னடைவு குறித்து இஸ்ரோ தலைவர் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்தத் திட்டம், இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) பெற்ற ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. 44.4 மீட்டர் உயரமுள்ள, நான்கு கட்டங்களைக் கொண்ட இந்த ராக்கெட், காலை 10:18 மணிக்கு திட்டமிடப்பட்ட நேரத்தில் முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. 17 நிமிட பயணத்திற்குப் பிறகு, செயற்கைக்கோள்கள் 511 கி.மீ உயரத்தில் உள்ள சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மூன்றாவது கட்டத்தில் ஏற்பட்ட கோளாறு இந்தத் திட்டம் நிறைவடைவதைத் தடுத்துவிட்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது..



