பொதுமக்கள் நிம்மதி.. ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை இன்று குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?

ChatGPT Image Jul 1 2025 09 24 01 AM 1 1

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.200 குறைந்து ரூ.75,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


ஆகஸ்ட் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. கடந்த 6 நாட்களில் மட்டும் சுமார் ரூ.2000க்கு மேல் தங்கம் விலை உயர்ந்தது..

இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.. அதன்படி சென்னையில் ஒரு கிராம் ரூ.25 குறைந்து, ரூ.9445க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரன் ரூ.200 குறைந்து ரூ.75,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இந்த வாரம் முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. ஒரு கிராம் வெள்ளி ரூ.127-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,27,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : டாலர் VS ரூபாய்| டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!. சாமானியர்களை எவ்வாறு பாதிக்கும்?.

RUPA

Next Post

மலச்சிக்கலை எப்படி போக்குவது?. இந்த மஞ்சள் நீரை குடித்தால் போதும்!. ஒரு நிமிடத்தில் நிவாரணம்!

Sat Aug 9 , 2025
அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை படிப்படியாக பொதுவானதாகி வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் தினமும் சீரக நீர் அல்லது பெருஞ்சீரக நீரைக் குடித்தால், இந்தப் பிரச்சனைகளில் இருந்து இயற்கையான முறையில் நிவாரணம் பெறலாம். சாப்பிட்ட பிறகும் வயிற்றில் கனமாக உணர்கிறீர்களா? வாயு, நெஞ்செரிச்சல் அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்கிறதா? இன்றைய பரபரப்பான வாழ்க்கை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, வயிற்றுப் பிரச்சினைகள் பொதுவானதாகிவிட்டன. ஆனால் நல்ல […]
Jeera Water Benefits 11zon

You May Like