பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் பெறத்தக்கவைகள் மேலாண்மைத் துறையில் உள்ள 82 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிட விவரம்:
- பகுதி மேனேஜர் – 13
- மண்டல மேனேஜர் – 13
- ஏரியா மேனேஜர் – 49
- புகார் மேனேஜர் – 2
- ப்ராசஸ் மேனேஜர் – 1
- வெண்டார் மேனேஜர் – 1
- பிளோர் மேனேஜர் – 3
வயது வரம்பு:
- பகுதி மேனேஜர்: 35–52 வயது
- மண்டல மேனேஜர்: 30–45 வயது
- ஏரியா மேனேஜர்: 26–38 வயது
- புகார் மேனேஜர்: 30–45 வயது
- ப்ராசஸ் மேனேஜர்: 25–38 வயது
- வெண்டார் மேனேஜர்: 25–38 வயது
- பிளோர் மேனேஜர்: 25–38 வயது
தகுதிகள்:
- அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு கட்டாயம்.
- முதுகலை டிப்ளமோ / MBA முடித்தவர்களுக்கு முன்னுரிமை.
- 5 முதல் 15 ஆண்டுகள் வரை பணியள அனுபவம் தேவை.
கீழ்க்கண்ட துறைகளில் அனுபவம் இருக்க வேண்டும்:
- வங்கி
- வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC)
- நிதி சேவைகள்
- நிதி நிறுவனம்
- காப்பீட்டுத் துறை
- நிதி இடைத்தரகர்
- தொலைத்தொடர்பு துறை
- பிற நிதி சார்ந்த துறைகள்
- இதில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வாடிக்கையாளர் சேவை உதவி மையத்தில் (Customer Support/Help Desk) பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம்: தேர்வாகும் நபர்களின் கல்வித்தகுதி மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யபப்டுவார்கள். விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பதார்கள் https://bankofbaroda.bank.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
Read more: Flash : ஹேப்பி நியூஸ்.. தொடர் உயர்வுக்கு பின் மீண்டும் சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ..!



