BOI வங்கியில் ஊக்கத்தொகையுடன் தொழிற்பயிற்சி.. 400 காலிப்பணியிடங்கள்..! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

bank job

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா (BOI) தேசிய அளவிலான தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


காலிப்பணியிடங்கள்: 400

வயது வரம்பு: பொதுத்துறை வங்கி தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 20 வயது நிறைந்து இருக்க வேண்டும். அதிகபடியாக 28 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: விண்ணப்பதார்கள் கட்டாயம் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 01.04.202 முதல் 01.12.2025 வரையில் கல்வித்தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும். விண்ணப்பதார்கள் ஒரு மாநிலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் பயிற்சிக்கான உடற்தகுதியை கொண்டிருக்க வேண்டும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்க கூடாது? ஏற்கெனவே பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் தொழிற்பயிற்சி பெற்றவர்கள் மற்றும் வேறு ஏதேனும் அரசு தொழிற்பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க இயலாது. அதே போன்று, 1 வருட பணிக்கான பயிற்சி மற்றும் பணி அனுபவம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க இயலாது.

உதவித்தொகை: தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ. 13,000 உதவித்தொகை வழங்கப்படும். வங்கியின் மூலம் ரூ.8,500, அரசு தரப்பின் மூலம் ரூ.4,500 என வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: பேங்க் ஆஃப் இந்தியாவில் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் உள்ளூர் மொழித் தகுதி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு: இந்த எழுத்துத் தேர்வு மொத்தம் 100 கேள்விகள் – 100 மதிப்பெண்கள் கொண்டு நடைபெறும். தேர்வு நேரம் 90 நிமிடங்கள் ஆகும்.

எழுத்துத் தேர்வில் இடம்பெறும் பாடப்பிரிவுகள்:

  • பொது விழிப்புணர்வு
  • ஆங்கிலம்
  • நுண்ணறிவு (Reasoning)
  • கணினி திறன்
  • உள்ளூர் மொழித் தகுதி

விண்ணப்பதாரர் எந்த மாநிலத்திற்கு விண்ணப்பிக்கிறாரோ, அந்த மாநிலத்தின் உள்ளூர் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ் மொழி அறிவு கட்டாயம். 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பில் தமிழ் மொழியை பாடமாக படித்தவர்கள், உள்ளூர் மொழித் தேர்விலிருந்து விலக்கு பெறுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க விரும்புவோர் https://nats.education.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதனைத்தொடர்ந்து, Apprenticeship with Bank of India என்பதில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.01.2026.

Read more: பள்ளி மாணவிகளின் சீருடைகள், செக்ஸ் டாய்ஸ்.. பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் ஆன்லைனில் வாங்கிய பொருட்கள்..!

English Summary

Public sector bank Bank of India (BOI) has issued a notification for national level apprenticeship.

Next Post

விஜய் நாவை அடக்கி பேச வேண்டும்.. அதிமுக களத்தில் இல்லாத கட்சியா? கொந்தளித்த செல்லூர் ராஜு..!

Mon Dec 29 , 2025
களத்தில் இல்லாதவர்களை பற்றி பேச மாட்டேன் என பேசிய விஜய்க்கு அதிமுக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது விஜய்யை காட்டமாக விமர்சித்தார்.. “ வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக கூட்டணி அமைத்துள்ளோம்.. இன்று கூட்டணி அமைத்திருக்கும் திமுகவுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒரே கொள்கையா? இதே திமுக அன்று பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது.. கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் அழைக்கலாம்.. […]
Sellur raju vijay

You May Like