சிலிண்டர் தட்டுப்பாடு.. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.. குட்நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்..!

Gas Cylinder Mk Stalin

போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசின் தெரிவித்துள்ள நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டதோடு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு – பெட்ரோல் – டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் குறித்து மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கும், தொடர்புடைய ஒன்றிய அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.


மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்ரபாணி
அவர்கள் தலைமையில், எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டமும் நேற்று நடைபெற்றுள்ளது. இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசு மேலும் தீவிரமாகக் கவனம் செலுத்திட நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.

போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்நேரத்தில் ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குத் துணை நின்று மேற்காசியப் போர்ச்சூழலை எதிர்கொள்வோம்!” என்று தெரிவித்துள்ளார்.

Read More : தமிழகத்தில் பெட்ரோல் பற்றி பயப்பட வேண்டாம்.. 90 நாட்களுக்கு கையிருப்பு உள்ளது.. வெளியான குட்நியூஸ்..!

RUPA

Next Post

சிலிண்டர் பற்றாக்குறை: சமையலுக்கு ஏன் LPG சிலிண்டர்களை மட்டுமே பயன்படுத்துகிறோம்..? வேறு எந்த கேஸையும் ஏன் பயன்படுத்தக்கூடாது..?

Thu Mar 12 , 2026
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதறம் உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியைப் பாதிக்கத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் எல்பிஜி (LPG) குறிப்பாக வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.. இந்த நிலைமை மீண்டும் ஒரு புதிரான கேள்வியை எழுப்பியுள்ளது: எல்பிஜி சிலிண்டர்கள் ஏன் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன? இதுகுறித்து பார்க்கலாம்.. எல்பிஜியின் பரவலான பயன்பாட்டிற்கான முதன்மையான காரணம், குறைந்த அழுத்தத்தின் கீழ் அதன் திரவமாக்கலின் எளிமை. இது அதிக அளவு எரிவாயுவை சிறிய எஃகு […]
lpg gas cooking

You May Like