புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமியிடம் அவர் வழங்கினார்.. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் உடன் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார். கட்சி மேலிடம் உத்தரவிட்டதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. காலியாக உள்ள அமைச்சர் பதவியை பாஜக எம்.எல்.ஏ ஜான் குமாருக்கு வழங்க கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே புதுச்சேரியில் பாஜக நியமன MLA-க்கள் 3 பேர் ராஜினாமா செய்தனர். ராமலிங்கம், வெங்கடேசன், ரமேஷ் பாபு ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதத்தை சபா நாயகரிடம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
இவர்கள் ராஜினாமா செய்ததற்கான தெளிவான காரணம் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், பாஜக மாநிலக் குழுவில் இடம்பெறும் உள்கட்சி முரண்பாடுகள், அமைச்சரவை பதவிக்கு இடமாற்றங்கள், மற்றும் அணிச்சேர்க்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட சில முக்கிய காரணிகள் பின்னணியாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் சந்தேகம் தெரிவிக்கின்றன.