புழல் ஏரியில் இருந்து கால்வாய் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது.. இதனால் தாழ்வான பகுதிகள் மழை நீர் தேங்கியதால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.. குறிப்பாக புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்..
மேலும் தொடர் கனமழை காரணமாக நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றனர்.. அந்த வகையில் சென்னை நகரின் முக்கிய நீர் ஆதாரமான புழல் ஏரியில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது..
இந்த நிலையில் புழல் ஏரியில் இருந்து கால்வாய் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 750 கன அடியில் இருந்து 1500 கன அடியாக அதிகரித்துள்ளது..
கனமழையால் நீர் வரத்து அதிகரித்தால் புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1,500 கன அடியாக அதிகரித்துள்ளது.. மேலும் புழல் ஏரிக்கான நீர்வரத்து 2930 கன அடியில் இருந்து 4,490ஆக அதிகரித்துள்ளது, நீர் இருப்பு 3,168 மில்லியன் கன அடியாக உள்ளது.. எனவே கரையோரங்களில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது..
Read More : இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கும்.. ஆரஞ்ச் அலர்ட் விடுத்த வானிலை மையம்!



