தமிழ் திரையுலகில சாக்லேட் பாயாகவும், அழகு நாயகனாகவும் வலம் வந்தவர் மாதவன். இளமையில் இருந்த போது வரிசையாக படங்களில் நடித்து வந்த இவர், தற்போது படங்களில் நடிப்பதை சற்று குறைத்துக்கொண்டார். 55 வயதிலும் சுருக்கமற்ற முகம், ஜொலிப்பான தோல், புத்துணர்ச்சி நிறைந்த பார்வை ஆகியவற்றால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சமீபத்தில் GQ இந்தியா மாத இதழுக்கு அளித்த பேட்டியில், தனது இளமை தோற்றத்திற்குப் பின்னுள்ள வாழ்வியல் பழக்கங்கள் மற்றும் தோல் பராமரிப்பு முறைகளைப் பகிர்ந்துள்ளார். தேங்காய் தண்ணீர், சூரிய ஒளி, சைவ உணவுதான் என் அழகு ரகசியம் என நடிகர் மாதவன் கூறியிருந்தார்.
சூரிய ஒளி சருமத்தின் அழகை கெடுக்க கூடும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் மாதவன் சொல்வது வேறுபட்டது. அவர் கூறுகையில், “நான் அதிகாலை நேரங்களில் கோல்ஃப் விளையாடுவேன். அதிகாலையில் கிடைக்கும் சூரிய ஒளி என் தோலை இறுக்கமாக வைத்திருக்கிறது. சுருக்கங்கள் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது.” என்று கூறினார்.
மிதமான அளவில் சூரிய ஒளியைப் பெறுவது, வைட்டமின் டி அளவை மேம்படுத்துவதுடன், மனநிலையைப் பாசிட்டிவாக வைத்திருக்கவும் துணை புரிகிறது. சூரிய ஒளியை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.
தேங்காய் தண்ணீர் என்பது இயற்கையால் அளிக்கப்படும் ஒரு அற்புதமான சூப்பர் டிரிங். இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள், பொட்டாசியம், மைக்ரோ நியூட்ரியன்கள் போன்றவை உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க மட்டுமல்லாமல், சருமக் கலங்கள் மென்மையாகவும், பளபளப்பாகவும், இயற்கை அழகுடன் காட்சியளிக்கவும் துணை செய்கின்றன என்றார்.
தனது குழந்தை பருவ வாழ்க்கையை நினைவு கூர்ந்த மாதவன், “நான் சின்ன வயசுல இருந்தப்போ எங்க வீட்டுல ஃபிரிட்ஜ் இல்ல. அதனால் எப்பவும் புதுசா சமைச்சு தான் சாப்பிடுவோம். அந்த பழக்கம் இப்பவும் இருக்கிறது.” என்றார். பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக் பண்ணப்பட்ட பொருட்கள், சூடுபடுத்தப்படும் உணவுகள் போன்றவை உண்பது கிடையாது. பெரும்பாலும் சைவ உணவுகளை தான் சாப்பிடுவேன் என்றார்.
அவரது தாத்தா-பாட்டி 90 வயதிற்கும் மேல் வாழ்ந்தவர்கள் என்றும், அவர்கள் தினமும் மூன்று வேளை சாதம் சாப்பிட்டதை அவர் நினைவுகூர்ந்தார். தொடந்து உணவு பழக்க வழக்கம் குறித்து பேசிய நடிகர் மாதவன், “நான் பசியாக இருக்கும்போதுதான் சாப்பிடுவேன். மணிக்கணக்கில் சாப்பிட மாட்டேன். வறுத்த உணவுகள் மற்றும் மதுவை மிகக் குறைவாகவே உட்கொள்வதாக கூறினார்.
Read more: விஜய்யுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை..? உண்மையை போட்டு உடைத்த EPS..!!