விஜய் உடன் ராகுலின் வியூக வகுப்பாளர் சந்திப்பு.. தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட்!

vijay praveen

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், சீமான் என இந்த தேர்தலில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. இதில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது..


கரூரில் துயர சம்பவத்திற்கு பின் ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் விஜய்யை அழைத்து பேசியிருந்தார்.. மறுபுறம் திமுக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப்படுகிறோம் என்ற குற்றச்சாட்டு காங்கிரஸின் சில மூத்த தலைவர்களிடையே ஒலிக்கிறது. மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்ற சில காங்கிரஸ் தலைவர்கள் திமுகவுடன் ஏற்பட்ட பிரச்சனைகளால் தவெகவை அணுகலாம் என்ற தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன..

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என்று கூறப்பட்ட நிலையில், கூட்டணி தொடர்பாக ஐவர் குழுவை காங்கிரஸ் அமைத்தது.. இதனால் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. எனினும் இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிக தொகுதிகளை வழங்காத பட்சத்தில் காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறப்படுகிறது..

இதனிடையே தவெக நிர்வாகி அருண்ராஜை காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி சந்தித்து பேசினார்.. அதே போல் சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார்..

இந்த சூழலில் சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை ராகுல்காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்து பேசினார்.. சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. ராகுல்காந்திக்கு நெருக்கமானவர்களில் ஒருவரான பிரவீன் சக்ரவர்த்தி தற்போது விஜய்யை சந்தித்து பேசியிருப்பது தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..

Read More : “நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் RSS-காரர்..” நாடாளுமன்றத்தில் ஒரே போடாய் போட்ட டி.ஆர். பாலு..! கொந்தளித்த பாஜக !

RUPA

Next Post

"தேனி சென்றால் OPS.. கோபி சென்றால் செங்கோட்டையன்.. டெல்டா சென்றால் டிடிவி.." சொந்த கட்சியினரை திட்டி EPS பிரச்சாரம் செய்கிறார்..!! உதயநிதி கிண்டல்..

Fri Dec 5 , 2025
EPS is campaigning by insulting its own party members..!! Udhayanidhi
edapadi k palanisamy udhayanidhi stalin

You May Like