பள்ளி வேன் – ரயில் விபத்து தொடர்பாக கேட் கீப்பரை பணியிடை நீக்கம் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது..
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் – ஆலப்பாக்கம் இடையே உள்ள ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது..
இந்த விபத்தில் பள்ளி வேன் தூக்கி வீசப்பட்டு உருக்குலைந்த காட்சி காண்போர் நெஞ்சை கலங்க வைக்கிறது.. மொத்தம் 5 பேர் வேனில் பயணித்த நிலையில், அவர்களில் 4 பேர் மாணவர்கள் என்றும், ஒருவர் ஓட்டுநர் என்று கூறப்படுகிறது.. பள்ளி வேனில் பயணித்த ஒரு மாணவர், ஒரு மாணவி என இருவர் உயிரிழந்துள்ளனர்..
3 பேர் படுகாயமடைந்த நிலையில், சுப்ரமணியபுரத்தை சேர்ந்த மாணவர் செழியன் (15) தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், அவர்களின் புத்தகப் பைகள் தண்டவாளத்தில் சிதறிக் கிடக்கும் காட்சி மனதை பதைபதைக்க வைத்துள்ளது.
இந்த ரயில் விபத்து தொடர்பாக கேட் கீப்பரை பணியிடை நீக்கம் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.. விபத்து குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், கேட் கீப்பரை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..