தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.. பகல் நேரத்தில் வெயில் அடித்தாலும், மாலை அல்லது இரவு நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்கள் அதே போல் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.. ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.. இதன் காரணமாக இன்று ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. அதன்படி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, தேனி. தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : வருவாய் பற்றாக்குறையால் தடுமாறும் தமிழகம்.. உத்தரப் பிரதேசத்தை விட பின்தங்கிய அவலம்..!! – அன்புமணி விமர்சனம்



