நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.. இந்த படம் உலை மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதை தொடர்ந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ரஜினி நடிக்கிறார்.. இந்த படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்..
இந்த நிலையில் சுமார் 47 ஆண்டுகளுக்கு பின் ரஜினி கமல் இணைந்து நடிக்கின்றனர்.. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.. ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.. நெல்சனின் ஸ்டைலில் கலகலப்பான ஸ்டைலான புரொமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.. இந்த புரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.



