காதலை சொல்ல ஸ்ரீதேவி வீட்டுக்கு சென்ற ரஜினி.. ஆனா ஏமாற்றத்துடன் திரும்பிய சூப்பர் ஸ்டார்.. ஏன் தெரியுமா?

newproject 2025 01 30t150229 592 1738229560

1975 -ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த்.. ஆரம்ப காலக்கட்டத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்த ரஜினி பின்னர் ஹீரோவாக மாறினார்.. அடுத்த சில ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மாறினார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராகவே வலம் வரும் ஒரே நடிகர் என்றால் அது ரஜினி தான்..


ரஜினிகாந்த் பல முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.. ஆனால் ரஜினி – ஸ்ரீதேவி ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 4 மொழிகளில் 19 படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். ரஜினியும் ஸ்ரீதேவியும் நல்ல நண்பர்களாக இருந்த நிலையில், ஒரு கட்டத்தில், ரஜினிகாந்த் ஸ்ரீதேவியை ஒருதலையாக காதலித்தார் என்று கூறப்படுகிறது.

ஆனால் ஸ்ரீ தேவியும் ரஜினியை காதலித்தாரா என்பது தெரியவில்லை… ஒருமுறை கே.பாலசந்தர் ஒரு பேட்டியில், ரஜினி ஸ்ரீதேவியை மிகவும் காதலித்ததாகவும், அவர் வீட்டிற்குச் சென்று அவரிடம் திருமணம் செய்து கொள்வது குறித்து பேச இருந்ததாகவும் கூறியுள்ளார்..

பாலச்சந்தரின் பழைய பேட்டி ஒன்றில் “ ஸ்ரீதேவியின் வீட்டு கிரஹபிரவேச விழாவுக்கு நானும் ரஜினியும் சென்றிருந்தோம். நாங்கள் அங்கு சென்ற உடன் மின்சாரம் போய்விட்டது. வீடு முழுவதும் இருட்டாக இருந்தது. இதை கெட்ட சகுனமாக கருதிய ரஜினிகாந்த், தனது திருமணத்தை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.” என்று கூறியிருந்தார். எனினும், ஸ்ரீதேவியின் சிறந்த நண்பராக ரஜினி எப்போதுமே இருந்தார்..

தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக ரஜினி இருக்கிறார்.. ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள கூலி படம் வரும் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்திற்காக அவரின் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : காதலை சொல்ல ஸ்ரீதேவி வீட்டுக்கு சென்ற ரஜினி.. ஆனா ஏமாற்றத்துடன் திரும்பிய சூப்பர் ஸ்டார்.. ஏன் தெரியுமா?

RUPA

Next Post

பெட்ரோல் செலவை பாதியாக குறைக்கலாம்! வாகன ஓட்டிகள் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய ட்ரிக்ஸ்!

Wed Aug 6 , 2025
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒருவரின் மாத வருமானத்தில் பெரும் பகுதி பெட்ரோலுக்கே செலவாகிறது.. ஆனால் இந்த சூழ்நிலையை மாற்ற முடியாதா? நிச்சயமாக முடியும். சில பழக்கங்களை மாற்றி, திட்டமிட்ட வாழ்க்கையை நடத்தினால், பெட்ரோல் செலவுகளை பாதியாக குறைக்க முடியும் என்பது சாத்தியம் தான்.. அதற்கு வாகன ஓட்டிகள் கட்டாயம் இந்த ட்ரிக்ஸை தெரிந்து கொள்ள வேண்டும்.. முதலில், குறுகிய தூரத்திற்கு கார் அல்லது பைக்கைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். […]
petrol diesel

You May Like