”ரஜினி எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சமாட்டார்.. ஆதவ் கூறியது பொய்.. ” திருமாவளவன் காட்டம்..!

rajini thiruma aadhav

நேற்று சென்னையில் நடந்த தவெக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா ரஜினி குறித்து பேசிய பேச்சு ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.. நேற்று பேசிய ஆதவ் “ அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற நினைத்தார் ரஜினிகாந்த். ஆனால் திமுக குடும்பம் மிரட்டியதால், அந்த மிரட்டலுக்கு பயந்து தான் அரசியலுக்கு வராமல் இருந்துவிட்டார்.. விஜய்யிடம் மனவலிமை இருக்கிறது என்பதை நான் சொல்கிறேன்..” என்று பேசியிருந்தார்.


அவரின் இந்த பேச்சுக்கு ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல் திருமாவளவனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது..

அதற்கு பதிலளித்த திருமாவளவன் “ ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்து ஆதாரமில்லாத கருத்து.. அவர் எந்த அடிப்படையில் இவ்வாறு தெரிவித்தார் என்று தெரியவில்லை.. ரஜினிகாந்த் அவர்கள் பதவி, அதிகாரம் ஆகியவற்றில் ஆசை கொண்டவர் அல்ல.. அவர் அந்த நிலையில் இருந்து முற்றிலும் விலகி நிற்பவர்.. முதிர்ச்சி அடைந்தவர் என்று நான் நம்புகிறேன். ஆகவே அவர் எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சி தன்னுடையை நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க வாய்ப்பே இல்லை. அவர் கூறியது பொய்யான குற்றச்சாட்டு..

ஆசைகாட்டி அரசியலுக்கு இழுப்பது, அச்சுறுத்தி வெளியேற்ற முடியாது என்ற நிலையை ரஜினிகாந்த் எட்டிவிட்டார். ஆதவின் குற்றச்சாட்டு ரஜினிகாந்தின் ஆளுமையை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது. ” என்று தெரிவித்தார்..

Read More : திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்தில் போட்டி..!

RUPA

Next Post

திடீர் ட்விஸ்ட்.. திமுக கூட்டணிக்கு ஆதரவு.. புகழேந்தி அறிவிப்பு.. எடப்பாடி கதை முடிந்தது எனவும் காட்டம்..!

Fri Mar 13 , 2026
அதிமுகவில் சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் புகழேந்தி. சசிகலா சிறை சென்ற பின் டிடிவி அணிக்கு சென்ரார்.. பின்னர் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்த வேறுபாட்டால் அதிலிருந்து விலகி ஓபிஎஸ் அணியில் இணைந்தார். சமீபத்தில் ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததை விமர்சித்த புகழேந்தி புரட்சி அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.. இந்த நிலையில் புகழேந்தி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து […]
pugalenthi 1

You May Like