சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள கூலி படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.. பாலிவுட் நடிகர் ஆமிர் கானும் இதில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கூலி படம் அமெரிக்க பிரீமியர் அட்வான்ஸ் புக்கிங் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. இது விஜய்யின் லியோ மற்றும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், ஷங்கரின் ஐ ஆகிய படங்களை மட்டுமல்ல, கபாலி படம் மூலம் ரஜினியின் சொந்த சாதனையையும் முறியடித்துள்ளது..
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் “ கூலி வர்றான் சொல்லிக்கோ! கூலி படம் வட அமெரிக்காவில் பிரீமியர் அட்வான்ஸ் விற்பனையில் 2 மில்லியன் டாலரை தாண்டிய முதல் தமிழ் படம். கூலி ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது” என்ற தெரிவித்துள்ளது..
கூலியின் இந்த புதிய மைல்கல்லை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.. ரசிகர்கள் பலரும் “ரஜினிகாந்த் மாஸ் தருணம் என்று பாராட்டி வருகின்றனர்…
பயனர் ஒருவர், “அனைத்தும் மகத்தான பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைத்தது” என்று கருத்து தெரிவித்தார்.. மற்றொரு பயனர், “இந்தப் படம் ஒரு புதிய வரலாற்றை உருவாக்கும்” என்றும் பதிவிட்டுள்ளார்.. மற்றொரு ரசிகர், “1000 கோடி லோடிங்” என்று கருத்து தெரிவித்தார்
உலகளாவிய வெளியீட்டிற்கு ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், கூலி முந்தைய அனைத்து தமிழ் சினிமா பிரீமியர் விற்பனை புள்ளிவிவரங்களையும் முந்தியுள்ளது. இதுவரை கபாலி (2016) $1.9 மில்லியன் முன் விற்பனையுடன் முதலிடத்தில் இருந்தது. விஜய்யின் லியோ (2023), தி கோட் (2024), மற்றும் பொன்னியின் செல்வன்: ஐ (2022) ஆகியவை தொடர்ந்து, ஜெயிலர் (2023) டாப் 5 இடங்களைப் பிடித்தன.
லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் இடையேயான முதல் கூட்டணி இதுவாகும், மேலும் இந்த ஜோடி ரசிகர்கள் வட்டாரங்களிலும் திரைப்படத் துறையிலும் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் அமெரிக்க முன் விற்பனை, இன்று வரை உலகளாவிய பார்வையாளர்களிடையே ரஜினிகாந்தின் ஈர்ப்பை மட்டுமல்ல, சர்வதேச அளவில் தமிழ் சினிமாவுக்கான வளர்ந்து வரும் சந்தையையும் காட்டும் வகையில் அமைந்துள்ளது.
சமீபத்தில் நடந்த கூலி ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிகாந்த் ரெக்கார்ட் மேக்கர் மட்டுமல்ல, ரெக்கார்ட் பிரேக்கர் என்று கூறியிருந்தார்.. அவர் கூறியது போலவே படம் வெளியாகும் முன்பே கூலி படம் புதிய சாதனையை படைத்துள்ளது.. வெளியான உடன் இப்படம் மேலும் பல புதிய சாதனையை படைக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
Read More : “கூலி.. ஒன் மேன் ஷோ.. கடைசி 20 நிமிஷம் வாய்ப்பே இல்ல..” சொன்னது யார் தெரியுமா?