ரஜினிகாந்தின் 171வது படமாக கூலி படம் உருவாகி உள்ளது.. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.. இந்த படம் சுமார் ரூ.375 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. மேலும் பாலிவுட் நடிகர் ஆமீர் கானும் இதில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.. கூலி பட பாடல்கள், ட்ரெய்லர் என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூலி படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது..
இந்த நிலையில் கூலி படத்தின் நடிக்க நடிகர்கள் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது.. இந்த படத்தில் தேவா என்ற கேரக்டரில் நடிக்கும் ரஜினி ரூ.200 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது..
பாலிவுட்டின் ஆமிர் கான் தாஹா என்ற ஒரு சிறிய ஆனால் உயர்மட்ட கேமியோ வேடத்தில் தோன்றுவார். திரையில் சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே தோன்றினாலும், அவர் அந்த வேடத்திற்காக ரூ.20 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது..
டோலிவுட் மூத்த நடிகர் நாகார்ஜுனா, சைமன் என்ற நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார்.. மேலும் இந்த படத்தில் நடிக்க, ரூ.10 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.. கூலி படத்தில் நடித்ததற்காக சத்யரா ரூ.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம்..
கன்னட திரையுலகின் பிரபலம் உபேந்திரா கலிஷா என்ற ரோலில் நடிக்கிறார்.. அவர் இந்த படத்தில் நடித்ததற்காக ரூ.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..
ப்ரீத்தியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன், ரூ.4 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜின் இயக்கக் கட்டணம் ரூ.50 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 2023 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற ஜெயிலர் படத்திற்குப் பிறகு ரஜினிகாந்துடன் மீண்டும் இணையும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ரூ.15 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.
கூலி ஏற்கனவே ப்ரீ புக்கிங் விற்பனையில் ரூ.14 கோடி சம்பாதித்துள்ளதாகவும், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி சந்தைகளில் கிட்டத்தட்ட 6 லட்சம் டிக்கெட்டுகளை விற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன… இந்த எண்ணிக்கை ரூ.20 கோடியைத் தொட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கூலி படத்துடன் திரைக்கு வரும் பாலிவுட் படமான, வார் 2 இதுவரை ரூ.2.08 கோடி மதிப்புள்ள முன்பதிவுகளைப் பெற்றுள்ளது..
இதனிடையே கூலி படம் அமெரிக்க பிரீமியர் அட்வான்ஸ் புக்கிங் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. இது விஜய்யின் லியோ மற்றும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், ஷங்கரின் ஐ ஆகிய படங்களை மட்டுமல்ல, கபாலி படம் மூலம் ரஜினியின் சொந்த சாதனையையும் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..