லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா மற்றும் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகளவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்தது. அதன்படி தற்போது கூலி படத்தில் முதல் பாடலான சிக்கிட்டு பாடல் வெளியாகி உள்ளது. டி.ராஜேந்தேர், அனிருத் குரலில் உருவாகி உள்ள பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் ” எனக்கு பாஸே கிடையாது.. எங்க வேனா கேட்டுக்கோ, கூலி வர்ரான் சொல்லிக்கோ, வம்புக்கு நீயா இழுக்காத, எங்கிட்ட மோதி இழக்காத என மாஸான இந்த பாடல் வரிகளும் கவனம் பெற்றுள்ளன.
இந்த பாடலை பார்த்த ரஜினி ரசிகர்கள் #CoolieFirstSingle என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் 74 வயதிலும் இவ்வளவு ஸ்டைலாக இருக்கும் ஒரே நடிகர் என்றால் அது ரஜினி தான் என்றும், இந்த படம் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Read More : ‘தக் லைப்’ படத்திற்காக மணிரத்னம் மன்னிப்பு கேட்கவில்லை..!! – தயாரிப்பு நிறுவனம் விளக்கம்