வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் கூலி.. லோகேஷ் கனகராஜ் – ரஜினி கூட்டணியில் உருவாகி உள்ள முதல் படம் என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..
இந்த படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.. இந்த படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. இந்த படத்தின் புரோமோஷன் பணிகளை படக்குழு இப்போதே தொடங்கி விட்டது.. இதனிடையே படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்..
இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூலி ட்ரெயிலர் இன்று வெளியானது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கூலி படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்தது.. இதில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், ஆமீர்கான், லோகேஷ் கனகராஜ், உபேந்த்ரா, சௌபின் ஷாகிர், அனிருத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..
இந்த விழாவில் கூலி ட்ரெய்லர் 7 மணிக்கு வெளியிடப்பட்டது.. மாஸ், அதிரடி காட்சிகளுடன் வெளியாகி உள்ள ட்ரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கூலி படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. தெலுங்கு, கன்னடம், பாலிவுட் படங்கள் அசால்டாக ரூ.1000 கோடி வசூல் சாதனை படைத்து வருகிறது.. ஆனால் இதுவரை எந்த தமிழ்ப்படமும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்யவில்லை.. எனவே கூலி படம் முதல் 1000 கோடி வசூல் படமாக அமையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது..
Read More : நடிகை ரம்யாவுக்கு ரேப், கொலை மிரட்டல்.. 2 பேர் கைது.. மேலும் 11 பேரை தீவிரமாக தேடும் போலீசார்..