74 வயதிலும் நடிகர் ரஜினி இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவர் கடைசியாக வேட்டையன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி நடித்துள்ளார். இந்த படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது..
இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகளவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் சிக்கிட்டு, மோனிகா பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த நிலையில் கூலி படத்தின் கதை இணையத்தில் கசிந்துள்ளது.. அதன்படி இந்த படத்தில் ரஜினிகாந்த் தேவா என்ற வயதான தங்கக் கடத்தல்காரராக நடிக்கிறார்.. விண்டேஜ் தங்கக் கடிகாரங்களில் மறைந்திருக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது பழைய கிரிமினல் சாம்ராஜ்யத்தை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்குவது தான் படத்தின் கதையாம்.. தனது கடந்தகால தவறுகளை திருத்திக் கொள்வதன் மூலம் தனது பழைய மாஃபியா குழுவை ரஜினி உருவாக்க நினைக்கிறார். ஆனால் அதில் அவருக்கு பல எதிர்பாராத சிக்கல் வருகின்றன.. தனது சாம்ராஜ்யத்தை மீட்டெடுக்கும் அவரது திட்டம் நிறைவேறியதா? அதில் என்ன சிக்கல்களை ரஜினி எதிர்கொள்கிறார் என்பது தான் படத்தின் மீதிக் கதை என்றும் கூறப்படுகிறது..
லியோ படத்தை தொடர்ந்து லோகேஷ் கூலி படத்தை இயக்கி வருகிறார்.. லோகேஷ் இதுவரை இயக்கி இருந்த கைதி, விக்ரம் மற்றும் லியோ போன்ற பல படங்கள் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் (LCU) ஒரு பகுதியாக இருந்தபோதிலும், கூலி LCU படம் இல்லை என்றும், தனித்த படமாக இருக்கும் என்றும் லோகேஷ் தெரிவித்திருந்தார்.
கூலிப் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
Read More : திரையுலகில் சோகம்.. வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்த இயக்குநர் வேலு பிரபாகரன் இன்று காலமானார்..!!