இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த், இன்று வரை ரசிகர்களின் இதயத்தில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். சாதாரண கண்டக்டராக இருந்து இன்று ஆசியாவின் மிக அதிக சம்பளம் பெறும் நடிகராக உயர்ந்திருக்கும் ரஜினி, ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய்வரை சம்பளம் வாங்குகிறார் என கூறப்படுகிறது.
அவரது புகழ் எவ்வளவு உயர்ந்திருந்தாலும், ரஜினி எப்போதும் தன்னுடைய எளிமையைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர். புகழின் உச்சியில் இருந்தாலும், அவர் “நான் இன்னும் ஒரு சாதாரண மனிதன் தான்” என்ற மனநிலையுடன் வாழ்கிறார். அதுவே இவரை இன்று வரை மக்கள் சூப்பர் ஸ்டாராக கொண்டாட வைக்கும் முக்கிய காரணம் என்று ரசிகர்கள் பெருமையாக கூறுகின்றனர். புகழின் உச்சியில் இருக்கும் ரஜினிகாந்த் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது.
அதாவது ரஜினிகாந்த் நடித்த சிவா படத்தின் ஷூட்டிங் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்திருக்கிறது. அப்போது மாலை ரஜினிகாந்த்தை ஸ்டில்ஸ் ரவி புகைப்படம் எடுக்க வந்திருக்கிறார். உடனடியாக ரஜினிகாந்த்தோ, என்ன நீங்களும் ஷாட்டுக்கு ஷாட் புகைப்படம் எடுப்பீர்களா என்று கேட்க; ரவி கோபப்பட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாராம்.
அதன் பிறகு அவரை மீண்டும் அழைத்து ‘என்ன சார் கோபப்பட்டீர்களா?’ என்று கேட்டுவிட்டு; எனக்கு உடல்நிலை சரியில்லை அதனால்தான் அப்படி பேசிவிட்டேன் என்றுள்ளார். அதனைத் தொடர்ந்து சிவா படத்தின் இயக்குநர் ரவியிடம் வந்து, ‘நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அவருக்கு ஆறு மணிக்கு மேலே தண்ணி அடிக்கும் நியாபகம் வந்துவிடும். லேட்டாகிவிட்டதாக டென்ஷனில் இருக்கிறார்’ என்று தெரிவித்திருக்கிறார். இந்தத் தகவலை ஸ்டில்ஸ் ரவி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Read more: இன்ஸ்டா காதலியுடன் ஆசை தீர உல்லாசம்..!! திருமண டார்ச்சரால் மாணவியை கொன்று புதைத்த ராணுவ வீரர்..!



