ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1995-ம் ஆண்டு வெளியான படம் பாட்ஷா.. இந்த படத்தில் ரகுவரன், நக்மா, ஜனகராஜ், விஜயகுமார், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.. தேவா இசையில் உருவான இந்த படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் இன்றலவும் கொண்டாடப்படுகிறது..
ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த பிளாக்பஸ்டர் ஹிட்டாக மாறியது.. மேலும் தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படம் என்று கொண்டாடப்படுகிறது.. பாட்ஷா படம் ட்ரெண்ட் செட்டர் படமாகவும் அமைந்தது.. இதே பாணியில் பல படங்கள் வெளியாகி வந்தன..
இந்த நிலையில் பாட்ஷா படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.. அதன்படி இந்த படம் நாளை திரையரங்குகளில் புதிய வடிவத்தில் ரீ ரிலீசாக இருக்கிறது.. Atmos-ல் முழு ஒலிப்பதிவையும் மீண்டும் உருவாக்கி மறுவடிவைப்பு செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சத்யா சினிமாஸ் அறிவித்துள்ளது.
4k Dolby மற்றும் Atmos ஒலியில் அதிநவீன தொழில்நுட்பத்தால் இந்த படம் புதுப்பொலிவுடன் உருவாக்கப்பட்டுள்ளது.. இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது..
Read More : கட்டப்பா பாகுபலியை கொல்லாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? பிரபாஸ், ராணா சொன்ன கிண்டலான பதில்…



