இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த், இன்று வரை ரசிகர்களின் இதயத்தில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். சாதாரண கண்டக்டராக இருந்து இன்று ஆசியாவின் மிக அதிக சம்பளம் பெறும் நடிகராக உயர்ந்திருக்கும் ரஜினி, ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய்வரை சம்பளம் வாங்குகிறார் என கூறப்படுகிறது.
அவரது புகழ் எவ்வளவு உயர்ந்திருந்தாலும், ரஜினி எப்போதும் தன்னுடைய எளிமையைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர். புகழின் உச்சியில் இருந்தாலும், அவர் “நான் இன்னும் ஒரு சாதாரண மனிதன் தான்” என்ற மனநிலையுடன் வாழ்கிறார். அதுவே இவரை இன்று வரை மக்கள் சூப்பர் ஸ்டாராக கொண்டாட வைக்கும் முக்கிய காரணம் என்று ரசிகர்கள் பெருமையாக கூறுகின்றனர்.
இந்நிலையில் படையப்பா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது படையப்பா படத்தில் ரஜினிக்கு இரண்டாவது மகளாக நடித்தவர் அனிதா வெங்கட். முதலில் அந்தப் படத்தில் ரஜினிக்கு ஒரு மகள் என்கிற ரீதியில்தான் கதை இருந்ததாம். ஆனால் அனிதா வெங்கட் அந்த கேரக்டருக்கான ஆடிஷனில் கலந்துகொண்ட பிறகு கதையில் எனக்கு இரண்டு மகள்கள் இருப்பது போன்றும்; அனிதா வெங்கட்டை அந்த கேரக்டருக்கு போடும்படியும் ரஜினிகாந்த் சொல்லிவிட்டாராம்.
அதனையடுத்து படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது அனிதா வெங்கட்டி நடிப்பை ரஜினிகாந்த் ரசித்தாராம். ஒருமுறை ஷூட்டிங்கின்போது அனிதாவுக்கும் அவரது தாய்க்கும் நாற்காலி போடவில்லையாம். அதை கவனித்துவிட்ட ரஜினி, நான் எப்படி ஒரு நடிகரோ அதேபோல்தான் அனிதாவும் ஒரு நடிகை. எனக்கு என்ன மரியாதை கொடுக்கிறீர்களோ அதே அளவு மரியாதையை அவருக்கும் தர வேண்டும் என்று கூறினாராம்.



