மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் நடிகர் ரஜினியை சந்தித்து பேசினார்.
உச்ச நடிகர்கள் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் நிலையில், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கும் பிரபலங்கள் யார் என்றால் ரஜினி, கமல் தான்.. ஆரம்பக்கால திரை வாழ்க்கையில் ஒரு சில படங்களில் இணைந்து நடித்து வந்த ரஜினி, கமல் பின்னர் இருவரும் பேசி தங்களுக்கான பாதையை தேர்வு செய்தனர்.. ரஜினி சூப்பர்ஸ்டாராகவும், கமல்ஹாசன் உலக நாயகனாகவும் மாறி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்..
இன்றும் கூட இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ரஜினி, கமல் இருவருமே பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.. என்ன தான் ரஜினி, கமல் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சண்டையிட்டுக் கொண்டாலும் சமகாலத்தில் வளர்ந்த உச்ச நடிகர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று இளம் நடிகர்களுக்கு ஒரு முன் மாதிரியாகவும் திகழ்கின்றனர்.. அன்று முதல் இன்று வரை ரஜினி கமல் இருவருமே பரஸ்பரம் மரியாதை, நட்புடப் பழகி வருகின்றனர்… இவர்கள் ஒன்றாக பல மேடைகளில் கலந்து கொள்ளும் போதும் இருவருக்குமான அழகான நட்பை பார்க்க முடியும்..
அந்த வகையில் மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் நடிகர் ரஜினியை சந்தித்து பேசினார். ஜூலை 25-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக மநீம தலைவர் கமல்ஹாசன் பொறுப்பேற்கிறார்.. சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினியை சந்தித்து மநீம் தலைவர் கமல்ஹாசன் வெற்றி பெற்றார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..