போதைப்பொருள் கடத்தல் மற்றும் நுகர்வு வழக்கு தொடர்பாக நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அமலாக்க இயக்குனரகம் நேரில் ஆஜராக கூறி சம்மன் அனுப்பியுள்ளது.
டிசம்பர் 19-ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நடிகைக்கு சமன் அனுப்பப்பட்டுள்ள. செப்டம்பர் 2, 2021 அன்று ராகுல் ப்ரீத்திடம் போதைப் பொருள் கிடைத்த வழக்கு தொடர்பாக அமலாக துறை விசாரணை மேற்கொண்டது.
எல்.எஸ்.டி மற்றும் எம்.டி.எம்.ஏ மற்றும் பிற போதைப்பொருட்களை வழங்கும் உயர்தர போதைப்பொருள் கார்டெல் 2017 இல் தெலுங்கானாவின் மதுவிலக்கு மற்றும் கலால் துறையால் கைது செய்யப்பட்ட பின்னர், பணமோசடி தடுப்பு நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த போதைப்பொருள் கடத்தல் மற்றும் நுகர்வு வழக்கை விசாரித்து வருகிறது. அந்த போதைப்பொருள் கும்பலின் பணம் பல்வேறு வழிகளில் மோசடி செய்யப்பட்டதைக் கண்டறிந்ததை அடுத்து, அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.