மருத்துவமனையில் ராமதாஸ்.. உடல்நலம் குறித்து நேரில் நலம் விசாரித்தார் இபிஎஸ்!

eps ramadoss

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்..

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று மாலை உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றதாக தகவல் வெளியானது. இன்று காலை அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது.. அதில் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் நன்றாக இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.


மேலும் ராமதாஸின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.. 2 நாட்கள் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.. தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.. இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே இன்று காலை ராமதாஸை சந்திக்க அவரின் மகன் அன்புமணி ராமதாஸ் மருத்துவமனைக்கு சென்றார்.. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “ ஐயா அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று இருதய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.. மேலும் 2 நாட்கள் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.. தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.. அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.. அவர் ஐசியூவில் இருப்பதால் அவரை பார்க்க முடியவில்லை.. நான் மருத்துவர்களிடம் பேசி உள்ளேன்..” என்று தெரிவித்தார்..

இந்த சூழலில் முதல்வர் ஸ்டாலின் இன்று அப்போலோ சென்று ராமதாஸின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.. அவரின் உடல்நலம் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தற்போது சந்தித்து நலம் விசாரித்தார்.. அவரின் உறவினர்களிடமும் ராமதாஸின் உடல்நிலை குறித்து அவர் கேட்டறிந்தார்..

Read More : தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. விவரம் இதோ..

English Summary

Opposition Leader Edappadi Palaniswami met Ramadoss, who is undergoing treatment at the hospital, and inquired about his well-being.

RUPA

Next Post

தலை & கழுத்து புற்றுநோயை 10 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியும் புதிய ரத்த பரிசோதனை! விஞ்ஞானிகள் அசத்தல்!

Mon Oct 6 , 2025
Scientists have developed a new blood test that could help identify head and neck cancers 10 years before symptoms appear.
blood test

You May Like