வன்னியர் சமூதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் அன்புமணி தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சிநிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், கட்சியின் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் வெட்ட வெளிச்சம் ஆனது. ராமதாஸ் தனது மகள் வழி பேரனான முகுந்தன் பரசுராமனை இளைஞர் அணி தலைவராக நியமித்தார்.
இதற்கு அன்புமணி மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார், இதனால் மேடையிலேயே வார்த்தை மோதல் வெடித்தது. ராமதாஸ், “நான் உருவாக்கிய கட்சி, எனது முடிவை ஏற்காதவர் வெளியேறலாம்” என்று கூற, அன்பு மணி பனையூரில் தனி அலுவலகம் திறந்து செயல்படுவதாக அறிவித்து நிர்வாகிகள் தன்னை சந்திக்க அங்கே வரும்படி அழைப்பு விடுத்தார். ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி கட்சியிலிருந்து நீக்குவதும், அன்புமணி ஆதரவாளர்களை பொறுப்பில் இருந்து ராமதாஸ் நீக்குவதுமாக பிரச்சனை முற்றி வருகிறது.
பாமக இரண்டாக பிரிந்து இருப்பதால் ராமதாஸ் திமுக கூட்டணியில், அன்புமணி அதிமுக கூட்டணியிலும் இணைவார்கள் என பேச்சு அடிப்பட்டது. இந்த நிலையில் வன்னியர் சமூதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் அன்புமணி தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். உள்கட்சி மோதலால் பாமக இரண்டாக பிரிந்து உள்ள நிலையில் அன்புமணிக்கு வாழ்த்து கூறியதன் மூலம் பாமக மீண்டும் இணைய முடிவு எடுத்துவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Read more: இன்ஸ்டா காதலனை வீட்டுக்கு அழைத்த பிளஸ்-2 மாணவி.. கடைசியில் நடந்த அதிர்ச்சி..!!