பாமக-வில் மீண்டும் வெடிக்கும் மோதல்.. அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் பரபர புகார்..!! குழப்பத்தில் தொண்டர்கள்

d8080873e6bc6caa45bf5deca86bf526 2

உரிமை மீட்க தலைமுறை காக்க என்ற நடைப்பயணத்தை அன்புமணி நாளை தொடங்க உள்ள நிலையில் அன்புமணி மீது காவல் ஆணையர் அலுவலத்தில் ராமதாஸ் புகார் அளித்துள்ளார்.


பாட்டாளி மக்கள் கட்சிநிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், கட்சியின் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் வெட்ட வெளிச்சம் ஆனது. ராமதாஸ் தனது மகள் வழி பேரனான முகுந்தன் பரசுராமனை இளைஞர் அணி தலைவராக நியமித்தார்.

இதற்கு அன்புமணி மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார், இதனால் மேடையிலேயே வார்த்தை மோதல் வெடித்தது. ராமதாஸ், “நான் உருவாக்கிய கட்சி, எனது முடிவை ஏற்காதவர் வெளியேறலாம்” என்று கூற, அன்பு மணி பனையூரில் தனி அலுவலகம் திறந்து செயல்படுவதாக அறிவித்து நிர்வாகிகள் தன்னை சந்திக்க அங்கே வரும்படி அழைப்பு விடுத்தார். ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி கட்சியிலிருந்து நீக்குவதும், அன்புமணி ஆதரவாளர்களை பொறுப்பில் இருந்து ராமதாஸ் நீக்குவதுமாக பிரச்சனை முற்றி வருகிறது.

கடந்த சில நாட்களாக இருவரும் மோதிக்கொள்ளாத நிலையில் பிரச்சனை முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இதன் தொடக்கமாக ராமதாஸ் பிறந்தநாளையொட்டி சென்னையை அடுத்த திருப்போரூரில் அன்புமணி ராமதாஸின் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் தொடங்க உள்ளதாக அறிவித்தார்.

இது மொத்தம் 100 நாட்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மக்கள்விரோத, சமூகநீதிக்கு எதிரான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை அகற்ற வேண்டும்; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடன் இந்த திட்டத்தை அன்புமணி ராமதாஸ் வகுத்துள்ளார்.

உரிமை மீட்க தலைமுறை காக்க என்ற நடைப்பயணத்தை அன்புமணி நாளை தொடங்க உள்ள நிலையில் அன்புமணி மீது காவல் ஆணையர் அலுவலத்தில் ராமக்தாஸ் புகார் அளித்துள்ளார். அதாவது நிறுவனரான தனது அனுமதி இல்லாமல் கொடி, நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பிரச்சாரம் ஆகியவற்றிற்கு தடை விதிக்க கோரி ராமதாஸ் டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்தூள்ளார். இந்த புகார் கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more: காலையிலே சோகம்.. சுற்றுலா வேன் மீது லாரி மோதி பயங்கர விபத்து.. 2 பேர் பலி.. 15 பேர் படுகாயம்..!!

English Summary

Ramadoss has filed a complaint against Anbumani at the Police Commissioner’s Office

Next Post

#Breaking : குட்நியூஸ்.. ஒரே நாளில் ரூ.1000 குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..

Thu Jul 24 , 2025
சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 1000 குறைந்து ரூ.74,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் […]
Jewellery 1

You May Like